மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 3 டிச 2020

விஜய் சேதுபதிக்குச் சிலை திறப்பு!

விஜய் சேதுபதிக்குச் சிலை திறப்பு!

சென்னையிலுள்ள எக்ஸ்பிரஸ் அவென்யு மாலில் விஜய் சேதுபதி நடித்துள்ள சீதக்காதி படத்தின் ‘அய்யா’ கேரக்டருக்கு மெழுகு சிலை திறக்கப்படுகிறது.

சீதக்காதி டிரெய்லர் ரிலீஸானதில் இருந்தே விஜய் சேதுபதி ரசிகர்கள் ஒருவிதமான அதிர்வலைகளில் இருந்து வருகின்றனர். அதிசிறந்த நடிகராக இருக்கும் இவர், அய்யாவாக நடிப்பதற்கு அத்தனை வருத்தப்பட வேண்டிய அளவுக்கு என்ன நடந்திருக்கும் என உடனே தெரிந்துகொள்ளக் காத்திருக்கின்றனர். தமிழகத்தின் அடையாளமாகவே படத்தில் சித்திரிக்கப்படும் அய்யா கேரக்டரை மேலும் பெருமைப்பட வைக்கும் அளவுக்குச் சிலை திறக்கும் நடவடிக்கையில் இறங்கியிருக்கிறது படக்குழு. இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி படத்தின் கதை குறித்துத் தெரிந்து கொள்ளலாம் என்ற நோக்கில் எக்ஸ்பிரஸ் மாலுக்குச் செல்ல தயாராகி வருகின்றனர் ரசிகர்கள்.

தமிழ் சினிமாவில் கோலாச்சிய இயக்குநர் மகேந்திரன் கலந்துகொண்டு சிலையைத் திறந்து வைக்கிறார். சீதக்காதி படக்குழுவினரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதாகத் தெரிகிறது. சீதக்காதி திரைப்படம் டிசம்பர் 20ஆம் தேதி ரிலீஸாகிறது.

ஞாயிறு, 2 டிச 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon