மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 12 ஆக 2020

தலைமை தேர்தல் ஆணையராக சுனில் பதவியேற்பு!

தலைமை தேர்தல் ஆணையராக சுனில் பதவியேற்பு!

இந்திய தலைமை தேர்தல் ஆணையராக சுனில் அரோரா இன்று பதவியேற்றுக்கொண்டார்.

இந்திய தலைமை தேர்தல் ஆணையராக பதவி வகித்துவந்த ஓ.பி.ராவத் நேற்று ஓய்வு பெற்ற நிலையில், 23ஆவது தலைமை தேர்தல் ஆணையராக சுனில் அரோரா இன்று (டிசம்பர் 2) பதவியேற்றுக்கொண்டார். பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சுனில் கடந்த 1980ம் ஆண்டு ராஜஸ்தானில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாகப் பணியில் சேர்ந்தார்.

ராஜஸ்தானில் தோல்பூர், அல்வார்,நாகுர், ஜோத்புர் ஆகிய மாவட்டங்களின் கலெக்ட்ராக பணியாற்றிய சுனில் அரோரா 1993-98 பாஜக ஆட்சிக் காலத்தில் ராஜஸ்தான் மாநில முதல்வராக இருந்த பைரான் சிங் ஷெகாவத்தின் செயலாளராக பணியாற்றினார். பின் பாஜக முதல்வராக வசுந்தராஜே சிந்தியா ராஜஸ்தானில் பதவி வகித்தபோது அவரது முதன்மைச் செயலாளராக 2005 முதல் 2008 வரை பணியாற்றியவர்.

அரோரா கடந்த 2017 ஆகஸ்டு 31 ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார். வரும் 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் மட்டுமல்லாமல் ஜம்மு காஷ்மீர், ஒடிசா, மகாராஷ்டிரா, அரியானா, ஆந்திரா, அருணாசல் பிரதேஷ், சிக்கிம் ஆகிய மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலை நடத்தும் முக்கிய பொறுப்புகள் அவரிடம் உள்ளது.

ஞாயிறு, 2 டிச 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon