மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 20 ஜன 2020

உள்கட்டுமான உற்பத்தி சரிவு!

உள்கட்டுமான உற்பத்தி சரிவு!

இந்தியாவின் உள்கட்டுமான உற்பத்தி வளர்ச்சி விகிதம் அக்டோபர் மாதத்தில் மட்டும் 4.8 விழுக்காடாகக் குறைந்துள்ளதென மத்திய புள்ளியியல் துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்த அறிக்கையில் , “இந்தியாவின் முக்கிய எட்டு உள்கட்டுமான துறையாகக் கருதப்படும் நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்புப் பொருட்கள், இயற்கை உரம், உருக்கு, சிமென்ட் மற்றும் மின்சாரம் போன்றவற்றின் மொத்த உற்பத்தி வளர்ச்சி விகிதம் கடந்தாண்டு 5 விழுக்காடாக இருந்தது. ஆனால் இந்த அக்டோபரில் இவற்றின் வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது.

குறிப்பாக இயற்கை உரம் உற்பத்தி 11.5 விழுக்காடு அளவிற்கும், கச்சா எண்ணெய் 5 விழுக்காடும், இயற்கை எரிவாயு 0.9 விழுக்காடும் கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் உற்பத்தி சரிவை சந்தித்திருக்கிறது’ என்று கூறப்பட்டுள்ளது. அதேசமயத்தில் நிலக்கரி, சிமென்ட், மின்சாரம் போன்றவற்றின் உற்பத்தி சென்ற ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு அக்டோபரில் சற்று அதிகரித்துள்ளதாகவும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 2018-2019 காலாண்டில் ஏப்ரல்-அக்டோபர் வரையிலான ஏழு மாதங்களில் இந்த எட்டு துறைகள் 5.4 விழுக்காடாக வளர்ச்சி கண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஞாயிறு, 2 டிச 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon