மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 12 ஆக 2020

சிம்புவின் ‘கலகலப்பு’ கூட்டணி!

சிம்புவின்  ‘கலகலப்பு’ கூட்டணி!

சிம்பு, கேத்ரின் தெரசா, மேகா ஆகாஷ் இணைந்து நடித்துள்ள வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் செப்டம்பர் மாதம் தொடங்கியது. ஒரு வாரத்துக்கும் மேலாக அங்கு நடைபெற்ற படப்பிடிப்பில் பாடல் காட்சி படமாக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. தற்போது வெளியாகியுள்ள டீசரைப் பார்க்கும்போது படத்தின் பெரும்பாலான காட்சிகள் வெளிநாட்டில் படமாக்கப்பட்டது தெரிகிறது.

சுந்தர் சி படம் என்றாலே காமெடிக்கும் கலகலப்புக்கும் பஞ்சம் இருக்காது. இரண்டு நாயகிகள், காமெடிக்கு யோகி பாபு, ரோபோ சங்கர், முக்கிய கதாபாத்திரங்களில் மகத், பிரபு, ரம்யா கிருஷ்ணன், நான் கடவுள் ராஜேந்திரன் ஆகியோர் பங்கு பெற்றிருப்பதால் டீசரே கலர்ஃபுல்லாக உள்ளது. “என்னை நம்பி கெட்டவங்க யாருமே கிடையாது, நம்பாம கெட்டவங்க நிறைய பேர் இருக்காங்க” என்ற எம்ஜிஆர் காலத்து வசனங்கள் இடம்பெற்றிருந்தாலும் சிம்பு வரும் இடங்கள் மாஸ் காட்சிகளாக உள்ளன. கேத்ரின் தெரசா, மேகா ஆகாஷ் இருவருடனும் சேர்ந்திருப்பது போன்ற காட்சிகள் வந்தாலும் சிம்புவுக்கு இதில் யார் ஜோடி என்பது தெளிவாக இல்லை.

லைகா புரொடக்‌ஷன் தயாரித்துள்ள இந்தப் படம் பொங்கலுக்குத் திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே ரஜினிகாந்த் நடிக்கும் பேட்ட, அஜித் நடிக்கும் விஸ்வாசம் ஆகிய படங்கள் பொங்கல் பண்டிகையைக் குறிவைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

வந்தா ராஜாவாதான் வருவேன் டீசர்

சனி, 1 டிச 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon