மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 24 ஜன 2020

3,000 கோடி ரூபாய்க்கு ஆயுதங்கள்!

3,000 கோடி ரூபாய்க்கு ஆயுதங்கள்!

ரஷ்யாவிலிருந்து 3,000 கோடி ரூபாய்க்கு ஆயுதங்கள் வாங்க மத்திய அரசின் பாதுகாப்புத் தளவாடங்கள் கொள்முதல் செய்யும் கவுன்சில் நேற்று (டிசம்பர் 1) ஒப்புதல் அளித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில், கடந்த அக்டோபரில் மத்திய அமைச்சரவையின் பாதுகாப்புக் கமிட்டிக் கூட்டம் நடத்தப்பட்டது. அந்தக் கூட்டத்தில் பி1135 ரக கப்பல்களும் வாங்குவதற்கும் முடிவு செய்யப்பட்டது. அத்துடன், (பாதுகாப்புத் தளவாடங்கள் கொள்முதல் செய்யும் கவுன்சில் அளித்த ஒப்புதலின் அடிப்படையில்) ரஷ்யாவில் கட்டப்பட்டுவரும் இரண்டு கப்பற்படைக்கான கப்பல்களும், பிரம்மோஸ் ரக ஏவுகணைகளும் வாங்க முடிவு செய்யப்பட்டது. அந்த முடிவுகளின் அடிப்படையில் ரஷ்யாவிலிருந்து 3,000 கோடி ரூபாய்க்கு ஆயுத தளவாடங்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,பிரம்மோஸ் ஏவுகணைகள் நன்றாகப் பரிசோதிக்கப்பட்ட ஏவுகணைகளாகும். அவை கப்பல்களிலிருந்து ஏவப்படும் முதன்மை ஆயுதங்களாகும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கடந்த 2016இல் இந்தியாவும் ரஷ்யாவும் ஓர் ஒப்பந்தம் கையெழுத்திட்டன. அந்த ஒப்பந்தத்தின்படி தால்வார் என்ற நான்கு போர்க்கப்பல்கள் வாங்குவதற்கான ஒப்பந்தமாகும். இதில் இரண்டு கப்பல்கள் ரஷ்யாவிலிருந்து நேரடியாகக் கொள்முதல் செய்யப்படுகின்றன. மற்ற இரண்டு கப்பல்கள் ரஷ்யாவின் உதவியுடன் கட்டப்பட உள்ளன. பிரம்மோஸைப் பொறுத்தவரை இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான கூட்டு முயற்சியாகும்.

சனி, 1 டிச 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon