மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 12 ஆக 2020

அதிகரிக்கும் ஆன்லைன் பரிவர்த்தனைகள்!

அதிகரிக்கும் ஆன்லைன் பரிவர்த்தனைகள்!

நவம்பர் மாதத்தில் ஆன்லைன் பணப் பரிவர்த்தனை 9 விழுக்காடு அதிகரித்திருப்பதாகத் தேசிய கொடுப்பனவுக் கழகம் தெரிவித்துள்ளது.

தொழில்நுட்பத்தின் வளர்ச்சியினால் ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதில் பரிவர்த்தனை செய்வது மிக எளிமையாக இருப்பதால் இதற்கான வாடிக்கையாளர்கள் அதிகரித்து வருகின்றனர். இதுகுறித்து தேசிய கொடுப்பனவுக் கழகம் தனது ட்விட்டர் பக்கத்தில், ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை 53 கோடியைத் தாண்டி புதிய மைல்கல்லை எட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் பரிவர்த்தனையின் கீழ் ரூ.82,232.21 கோடி மதிப்பிலான 53 கோடிப் பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன. இது கடந்த மாதத்தைவிட 9 விழுக்காடு அதிகமாகும். அக்டோபர் மாதத்தில் ரூ.74,978.27 கோடி மதிப்புக்குச் சுமார் 48 கோடி பரிவர்த்தனைகள் நடந்துள்ளன. மேலும், பீம் செயலி வாயிலாக, நவம்பர் மாதத்தில் 1.7 கோடி பரிவர்த்தனைகள் ரூ.7,982 கோடி மதிப்புக்கு நடைபெற்றுள்ளன. இந்த பீம் செயலியானது ஆண்ட்ராய்டு தளத்தின் மூலமாக 3.5 கோடி பதிவிறக்கங்களும், ஐஓஎஸ் தளம் வாயிலாக 17 லட்சம் பதிவிறக்கங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த ஓராண்டில் யுபிஐ மூலமாக நடைபெற்ற பரிவர்த்தனையின் அளவு 2,000 விழுக்காடு அதிகரித்துள்ளதாகத் தேசிய கொடுப்பனவுக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சனி, 1 டிச 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon