மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 7 ஆக 2020

பிரியங்கா திருமண சுவாரஸ்யம்!

பிரியங்கா திருமண சுவாரஸ்யம்!

நடிகை பிரியங்கா சோப்ரா மற்றும் பாடகர் நிக் ஜோனஸ் ஆகியோரின் திருமணம் நேற்று (1.12.2018) மாலை 6 மணியளவில் நடைபெற்றது. ஒரு வாரமாக நடைபெற்ற திருமண விழாக்களில் பங்கெடுத்தவர்கள் அனைவருக்கும் முத்தாய்ப்பான நிகழ்ச்சியாக கிறிஸ்துவ முறைப்படி நடைபெற்ற திருமணமாக இருந்தது. இன்று (2.12.2018) காலை இந்து முறைப்படி திருமணம் நடைபெறுகிறது.

நிக் ஜோனஸின் தந்தை பால் கெவின் ஜோனஸ் கிறிஸ்துவத் திருமணத்தை முன்னின்று நடத்தி வைத்திருக்கிறார். பிங்க் நிற கவுன் அணிந்துகொண்டு இத்திருமணத்தில் பிரியங்கா நின்றதாக வெளியாகிய தகவல்கள், அலங்கார உடைகளில் பெயர்பெற்ற நிறுவனமான ரால்ஃப் லாரன் தனது பணியைச் கச்சிதமாகச் செய்து முடித்திருப்பதைக் குறிக்கிறது.

2017ஆம் ஆண்டு ரால்ஃப் லாரன் நடத்திய ‘2017 Met Gala' நிகழ்ச்சியின்போதுதான் நிக் மற்றும் பிரியங்கா ஆகியோர் நேரில் சந்தித்துக்கொண்டனர். அங்கிருந்து தொடங்கிய அவர்களது நட்பு, ஸ்மார்ட்போன் மூலம் காதலாகி நிகழ்ச்சிகளின் மூலம் பலருக்கும் தெரியவந்தது. ரால்ஃப் லாரனின் 50 ஆண்டுகள் நிறைவடைந்த நிகழ்ச்சியில் காதல் ஜோடிகள் இருவரும் கலந்துகொண்டு போட்டோஷூட் செய்து கொண்டனர். ஆனாலும், தங்களது இணைவுக்குக் காரணமாக இருந்த ரால்ஃப் லாரன் நிறுவனத்துக்கு இந்த வெகுமதி போதாதெனக் கருதிய பிரியங்கா - நிக் ஜோடி, தங்களது திருமணத்தின்போது கூடியிருந்த நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் ரால்ஃப் லாரன் உடையைக் கொடுத்து பெருமைப்படுத்தி இருக்கின்றனர்.

சனி, 1 டிச 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon