மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 3 ஆக 2020

கழுதையை இழிவுபடுத்தலாமா?

கழுதையை இழிவுபடுத்தலாமா?

தினப் பெட்டகம் – 10 (2.12.2018)

‘கழுதை’ என்ற சொல் வசைச் சொல்லாகவே மாறிவிட்டது. சோம்பேறியாக இருப்பவரையோ, மெதுவாகச் சிந்தித்து செயல்படுபவர்களையோ கழுதை என்றே அழைக்கிறோம். கழுதைகள் அப்படித்தானா? பார்க்கலாம்!

1. மற்ற எந்த நாடுகளையும்விட சீனாவில் அதிகமான கழுதைகள் உள்ளனவாம்.

2. கழுதைகள் ஆப்பிரிக்க மற்றும் மத்தியக் கிழக்கு பகுதிகளில் 5000 ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்களால் அடக்கப்பட்டுவிட்டன.

3. கழுதைகளின் கனைப்பு பல விநாடிகளுக்கு நீடிக்கும்!

4. ஒரு செயல் பாதுகாப்பற்றது என்று தெரிந்தால், கழுதை அதில் ஈடுபடாது.

5. 25 ஆண்டுகளுக்கு முன்பு சென்ற ஓர் இடத்தையோ, சந்தித்த பிற கழுதைகளையோ ஒரு கழுதை நினைவில் வைத்திருக்குமாம்.

6. முறையான பராமரிப்பில், ஒரு கழுதை 40 ஆண்டுகள் வரை வாழும்.

7. கழுதைகள் அடிப்படையில் பாலைவன மிருகங்கள். பாலைவனத்தில் 60 மைல்களுக்கு அப்பால் வரை ஒரு கழுதையின் குரலை இன்னொரு கழுதையால் கேட்க முடியுமாம். அவற்றின் பெரிய காதுகள் அதற்குத்தான் பயன்படுகின்றன.

8. குதிரைகளுடன் ஒப்பிடுகையில், கழுதைகளால் சுதந்திரமாகச் சிந்திக்கவும், தங்கள் பாதுகாப்பைக் கருதி செயல்படவும் முடியும்.

9. கழுதைகள் உண்ணும் உணவில் 95%-ஐ அவற்றின் உடல் எடுத்துக்கொள்ளுமாம். காரணம், பாலைவனங்களில் உணவோ, நீரோ குறைவாகவே கிடைப்பதால், அவற்றின் உடல் அதற்கேற்றாற்போல் தகவமைக்கப்பட்டுள்ளது.

10. தனியாக விடப்பட்டால், கழுதைகளுக்கு மன அழுத்தம் ஏற்படுமாம். அதனால்தான் அவை கூட்டமாக வாழ்கின்றன. பிற கழுதைகள் இல்லாதபட்சத்தில் ஆடுகளுடனோ, மனிதர்களுடனோ கழுதைகள் நட்பை உருவாக்கிக் கொள்கின்றன.

- ஆஸிஃபா

முந்தைய பகுதி : நோயை அறியாத நோயாளிகள்!

ஞாயிறு, 2 டிச 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon