மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 12 ஆக 2020

கார் விற்பனையில் பின்னடைவு!

கார் விற்பனையில் பின்னடைவு!

நவம்பர் மாதத்தில் மாருதி சுஸூகி நிறுவனம் 1.53 லட்சம் கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது.

கார் உற்பத்தியில் இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனமான மாருதி சுஸூகி, சென்ற ஆண்டின் நவம்பர் மாதத்தில் மொத்தம் 1,54,600 கார்களை விற்பனை செய்திருந்தது. ஆனால், இந்த ஆண்டின் நவம்பர் மாதத்தில் விற்பனையான கார்களின் எண்ணிக்கை 1,53,539 ஆகக் குறைந்துள்ளது. உள்நாட்டில் மட்டும் மொத்தம் 1,46,018 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. சென்ற ஆண்டின் நவம்பர் மாதத்தில் இதன் எண்ணிக்கை 1,45,300 ஆக இருந்தது. ஆல்டோ, வேகன் ஆர் உள்ளிட்ட சிறிய ரக கார்களின் விற்பனையும் 38,204இல் இருந்து 29,954 ஆகக் குறைந்துள்ளது. இது 21.6 சதவிகிதம் சரிவாகும்.

எனினும், ஸ்விஃப்ட், செலெரியோ, இக்னிஸ், பலேனோ, டிசையர் ஆகிய கார்களின் விற்பனை 10.8 சதவிகிதம் உயர்ந்து 72,533 ஆக உயர்ந்துள்ளது. சென்ற ஆண்டின் நவம்பர் மாதத்தில் இக்கார்களின் விற்பனை எண்ணிக்கை 65,447 ஆக இருந்தது. நடுத்தர ரகத்தைச் சேர்ந்த சியாஸ் கார்களின் விற்பனை எண்ணிக்கை 4,009இல் இருந்து 3,838 ஆகக் குறைந்துள்ளது. பயன்பாட்டு வாகனங்களான விடெரா பிரேஸா, எஸ்-கிராஸ், எர்டிகா ஆகிய கார்களின் விற்பனை எண்ணிக்கை 23,072இல் இருந்து 23,512 ஆக உயர்ந்துள்ளது. ஏற்றுமதியைப் பொறுத்தவரையில், 19.1 சதவிகிதம் கூடுதலாக 7,521 கார்கள் இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

சனி, 1 டிச 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon