மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 20 ஜன 2020

எதிர்பார்த்து ஏமாந்துபோன ஆர்எஸ்எஸ்!

எதிர்பார்த்து ஏமாந்துபோன ஆர்எஸ்எஸ்!

ஆர்எஸ்எஸ் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த பேரணிக்கு எதிர்பார்த்த அளவுக்குக் கூட்டம் வராததால் ஏற்பாட்டாளர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர்.

நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் வருவதற்குச் சில மாதங்களே இருக்கும் சூழலில், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு அரசுக்கு இந்துத்துவ அமைப்புகள் அழுத்தம் கொடுத்து வருகின்றன. நவம்பர் 25ஆம் தேதியன்று விஷ்வ இந்து பரிஷத், சிவசேனா போன்ற இந்துத்துவ அமைப்புகள் பெரும் கூட்டமாகக் கூடின. நேற்று (டிசம்பர் 1) டெல்லியின் ஜந்தேவாலா கோயிலிலிருந்து ஆர்எஸ்எஸ் ஒரு பேரணியைத் தொடங்கியுள்ளது. ஒன்பது நாட்கள் நடைபெறும் இந்தப் பேரணி டிசம்பர் 9ஆம் தேதியன்று ராம்லீலா மைதானத்தில் முடியும். சங்கல்ப யாத்திரை எனக் கூறப்படும் இந்தப் பேரணிக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பின் பிரிவான சுதேசி ஜக்ரான் மன்ச் ஏற்பாடு செய்துள்ளது

இந்தப் பேரணியில் லட்சக்கணக்கானோர் பங்கேற்பார்கள் என்று ஏற்பாட்டாளர்கள் எதிர்பார்த்தனர். எனினும், இப்பேரணியில் 100 பேருக்கும் குறைவானவர்களே பங்கேற்றனர். இதுகுறித்து இந்தப் பேரணிக்கு ஏற்பாடு செய்திருந்த கமல் திவாரி பேசுகையில், “இவர்கள் ஒரு பிரிவைச் சேர்ந்த சில காரியகர்த்தாக்கள் (செயற்பாட்டாளர்கள்) மட்டுமே. விரைவில் இவர்களுடன் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த 100 முதல் 200 காரியகர்த்தாக்கள் இணைவார்கள். பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான காரியகர்த்தாக்கள் உள்ளனர். அவர்களும் எங்களுடன் இணைவார்கள். இப்பேரணியின் இறுதி நாளில் ராம்லீலா மைதானத்தில் சுமார் 6 முதல் 8 லட்சம் பேர் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன்” என்று கூறினார்.

சனி, 1 டிச 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon