மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, ஞாயிறு, 9 ஆக 2020

இறக்குமதிப் பருப்பு பாதுகாப்பானது!

இறக்குமதிப் பருப்பு பாதுகாப்பானது!

இறக்குமதி செய்யப்படும் பருப்பு வகைகள் மற்றும் பீன்ஸ் ஆகியவை பாதுகாப்பானவைதான் என்று இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் ஆணையம் உறுதிசெய்துள்ளது.

பயிர்கள் வளரும்போது அவற்றின் இலைகளில் வளரும் சிறு செடிகள் மற்றும் புற்களை அகற்ற கிளிப்போசைட் என்ற ஒருவகை ரசாயனம் பயன்படுத்தப்படுகிறது. இதனால் சுகாதாரப் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இறக்குமதி செய்யப்படும் இவ்வகைப் பருப்புகள் மற்றும் பீன்ஸ்களால் சுகாதாரப் பாதிப்புகள் ஏற்படுவதைக் கண்டறிய இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் ஆணையத்தால் கடந்த ஒரு மாதமாகச் சோதனைகள் நடத்தப்பட்டன. இச்சோதனை முடிவில் இறக்குமதி செய்யப்படும் பருப்புகள் மற்றும் பீன்ஸ் ஆகியவற்றில் கிளிப்போசைட் அடங்கிய கசடுகள் எதுவும் இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

சென்ற மாதத் துவக்கத்தில் பருப்பு இறக்குமதி செய்யப்படும் துறைமுகங்களில் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இறக்குமதி செய்யப்பட்ட 319 பகுப்புகளில் 7இல் மட்டுமே கிளிப்போசைட் கசடுகள் இருந்துள்ளன. அதுவும் வரையறைக்கு உட்பட்ட அளவிலேயே இருந்ததால் இறக்குமதி செய்யப்பட்ட பருப்புகளால் எவ்வித சுகாதாரப் பாதிப்புகளும் ஏற்படாது என்று இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் ஆணையம் உறுதியளித்துள்ளது. எனினும் இன்னும் சில காலத்துக்கு இந்த தரச் சோதனைகள் தொடரும் என்று உணவுப் பாதுகாப்பு ஆணையத்தின் தலைமைச் செயலதிகாரியான பவன் அகர்வால் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

வெள்ளி, 16 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon