மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 18 செப் 2020

புதிய இந்தியாவை நோக்கிப் பயணம்!

புதிய இந்தியாவை நோக்கிப் பயணம்!

புதிய நெடுஞ்சாலைகள் மற்றும் புதிய வழித்தடங்கள் கட்டமைப்பால் புதிய இந்தியா விரைவில் உருவாகும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தேசிய நெடுஞ்சாலைகள் வாயிலாக நிதி திரட்டும் அரசின் சுங்கச் சாவடி இயக்குத் திட்டத்துக்கான ஒப்பந்தங்களை வழங்கும் நிகழ்ச்சி மும்பையில் நவம்பர் 15ஆம் தேதி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சரான நிதின் கட்கரி பேசுகையில், “சுங்கச் சாவடி இயக்குத் திட்டத்தின் முதற்கட்ட ஒப்பந்தத்தில் 1.5 பில்லியன் டாலர் மதிப்பிலான முதலீடு அரசுக்குக் கிடைத்தது. இது இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் மதிப்பீட்டை விட 1.5 மடங்கு கூடுதலாகும். இந்தமுறை நடைபெறும் இரண்டாம் கட்ட ஒப்பந்தத்தில் இன்னும் கூடுதலான முதலீடு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

இத்திட்டத்தில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களும் அதிகம் பயன்பெறுவார்கள். இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்துக்கு ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவிடமிருந்து 3.6 பில்லியன் டாலர் மதிப்பிலான கடன் கிடைத்துள்ளது. முந்தைய ஆட்சிக் காலத்தில் நாள் ஒன்றுக்கு 2 கிலோ மீட்டர் அளவிலான சாலை மட்டுமே அமைக்கப்பட்டது. ஆனால் இப்போது தினசரி சராசரியாக 28 கிலோ மீட்டர் அளவிலான சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த அளவை 45 கிலோ மீட்டராக உயர்த்த இலக்கு நிர்ணயித்து அதன்படி செயல்பட்டு வருகிறோம். பிரதமர் நரேந்திர மோடியின் கனவுப்படி புதிய இந்தியாவை நோக்கிய பயணத்தில் சாலை அமைப்பு முக்கியப் பங்களிக்கும்” என்று தெரிவித்தார்.

வெள்ளி, 16 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon