மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 28 அக் 2020

மாவோயிஸ்ட்டுகள் ஆதிக்கம் குறைந்தது: ராஜ்நாத் சிங்

மாவோயிஸ்ட்டுகள் ஆதிக்கம் குறைந்தது: ராஜ்நாத் சிங்

சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்டுகள் ஆதிக்கம் குறைந்துள்ளதாக தெரிவித்த உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாடு முழுவதும் தற்போது 11 மாவட்டங்களில் மட்டுமே மாவோயிஸ்ட்டுகள் கட்டுப்பாட்டில் இருப்பதாகத் தெரிவித்தார்.

சத்தீஸ்கரில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு இரு கட்டங்களாக தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது. மாவோயிஸ்ட்டுகள் ஆதிக்கம் மிகுந்த 18 தொகுதிகளுக்குக் கடந்த, நவம்பர் 12ஆம் தேதி முதற்கட்ட தேர்தல் நடைபெற்றது. மீதமுள்ள 72 இடங்களுக்கு நவம்பர் 20ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும். வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 11ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. முதற்கட்ட வாக்குப்பதிவில் 70 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்நிலையில் இரண்டாம் கட்ட தேர்தலுக்காக அம்மாநிலத்தில் பாஜகவும், காங்கிரசும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது. அதன்படி, சத்தீஸ்கரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று (நவம்பர் 15) செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது பேசிய அவர், சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்டுகள் ஆதிக்கம் குறைந்து வருகிறது. நாடு முழுவதும் 90 மாவட்டங்கள் மாவோயிஸ்ட்டுகள் கட்டுப்பாட்டில் இருந்தன. தற்போது 10 அல்லது 11 மாவட்டங்கள் மட்டுமே மாவோயிஸ்ட்டுகள் கட்டுப்பாட்டில் இருக்கின்றன, அடுத்த 5 வருடங்களில் மாவோயிஸ்ட்டுகள் ஆதிக்கம் முற்றிலும் ஒழிக்கப்படும்’’ என கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், சத்தீஸ்கரில் மக்கள் மத்தியில் காங்கிரஸ் கட்சி மீது நம்பகத்தன்மை இல்லை. அதனால் தான் இன்னும் காங்கிரஸ் கட்சியினர் முதல்வர் வேட்பாளரை அறிவிக்காமல் உள்ளனர் என்று விமர்சித்தார்.

வெள்ளி, 16 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon