மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 18 ஜன 2021

புற்றுநோய்: சிறுவனுக்கு முதல்வர் உதவி!

புற்றுநோய்: சிறுவனுக்கு முதல்வர் உதவி!

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுவனின் ரத்தப் புற்றுநோயைக் குணப்படுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உதவி அறிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டம், கோவநாயக்கன்பட்டியைச் சேர்ந்த சந்திரகுமார் என்பவரின் மகன் லோகேஷுக்கு ரத்த புற்றுநோய் பாதிப்பு இருந்துவந்துள்ளது. கோயம்புத்தூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் பல மாதங்களாக தன்னுடைய மகனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், சிகிச்சைக்காக 7 லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கி செலவு செய்து விட்டதாகத் தெரிவித்துள்ளார் சந்திரகுமார்.

எலக்ட்ரீஷியன் வேலை செய்யும் தனக்கு இனியும் மருத்துவச் செலவு செய்ய வசதியில்லை எனவும், தன்னுடைய மகனுக்குத் தொடர்ந்து சிகிச்சைக்கு உதவ வேண்டும் எனவும் நாளிதழ்கள் மூலம் வேண்டுகோள் விடுத்திருந்தார் அவர்.

இதுதொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டுள்ளார். அதில், "சந்திரகுமாரின் வேண்டுகோளினை நாளிதழில் நேற்று (14.11.2018) காலை நான் பார்த்தேன். லோகேஷுக்கு ஏற்பட்டுள்ள ரத்த புற்றுநோயைக் குணப்படுத்துவதற்கு, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் கோயம்புத்தூரிலுள்ள தனியார் மருத்துவமனையிலேயே தொடர்ந்து சிறப்பு சிகிச்சை அளித்திட, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத் துறை செயலாளர் அவர்களுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்" என்ற தெரிவிக்கப்பட்டிருந்தது.

வியாழன், 15 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon