மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 19 ஜன 2021

காற்றின் மொழி: சட்ட விரோத ரிலீஸுக்குத் தடை!

காற்றின் மொழி: சட்ட விரோத ரிலீஸுக்குத் தடை!

தொழில்நுட்ப வளர்ச்சியால் பயன் அடைந்ததுபோல, பாதிப்புகளையும் அடைந்து வருகிறது சினிமாத் துறை. காரணம், படம் வெளியான அன்றே இணையதளத்தில் வெளியாகிவிடுவது ஒவ்வொரு வாரமும் நடைபெறுகிறது. இந்த நிலையில் காற்றின் மொழி படத்தை இணையதளங்களில் வெளியிடத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் தற்போது உத்தரவிட்டுள்ளது.

இயக்குநர் ராதாமோகன் இயக்கத்தில் ஜோதிகா, விதார்த் நடித்துள்ள காற்றின் மொழி திரைப்படம் நாளை (நவம்பர் 16) வெளியாக உள்ளது. இந்தப் படத்தை இணையதளங்களில் வெளியிடத் தடை கோரி படத்தைத் தயாரித்துள்ள கிரியேட்டிவ் என்டர்டெய்னர்ஸ் உரிமையாளர் தனஞ்செயன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

நேற்று மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன் ஆஜரானார். அம்மனுவில், காப்புரிமையை மீறி 42 இணையதளங்களில் காற்றின் மொழி படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுந்தர், காற்றின் மொழி படத்தை இணையதளத்தில் வெளியிடத் தடை விதித்து உத்தரவிட்டார்.

அதிக டிக்கெட் கட்டணம், பார்க்கிங் கட்டணம், கேன்டீன் செலவுகள் ஆகியவைதான் பார்வையாளர்களை பைரஸி மூலம் படம் பார்க்கத் தள்ளுகிறது என்று கூறினாலும் அதை நியாயப்படுத்த முடியாது என்பதே திரைத் துறையினரின் கூற்றாக உள்ளது.

வியாழன், 15 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon