மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 28 செப் 2020

அக்ஷரா விவகாரம்: வழக்கு பதிவு!

அக்ஷரா விவகாரம்: வழக்கு பதிவு!

நடிகை அக்ஷரா ஹாசனின் அந்தரங்கப் புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியான புகார் குறித்து மும்பை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

நடிகர் கமல்ஹாசனின் இளைய மகள் அக்ஷரா ஹாசன். இந்தியில் அமிதாப் பச்சனும், தனுஷும் இணைந்து நடித்த ஷமிதாப் என்ற திரைப்படத்தின் மூலம் நடிப்புத் துறையில் அறிமுகமானார். தமிழில் அஜித் குமார் நடித்த விவேகம் படத்திலும் நடித்திருந்தார். இதனையடுத்து தற்போது விக்ரமுடன் ஒரு படத்தில் நடித்துவருகிறார்.

இந்த நிலையில், சமீபத்தில் அக்ஷரா ஹாசனின் அந்தரங்கப் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின. இந்தப் புகைப்படங்கள் ஒரு படத்தின் டெஸ்ட் ஷூட்டின்போது எடுக்கப்பட்டவை. ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவை இணையத்தில் கசிந்துள்ளன. இவ்விவகாரத்தில் புகார் அளிப்பதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறேன் என்று அக்ஷரா ஹாசன் கூறியிருந்தார்.

இதனையடுத்து இது தொடர்பாக மும்பை வெர்சோவா காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின்கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், காவல் துறையினருடன் இணைந்து சைபர் க்ரைம் பிரிவினரும் தீவிரமாக இவ்வழக்கில் கவனம் செலுத்தி வருகின்றனர். இதன் மூலம் புகைப்படத்தை முதலில் வெளியிட்ட கணினியின் IP முகவரியைக் கண்டறிய முயற்சி செய்து வருகின்றனர். இவ்விவகாரத்தில் குற்றவாளி யார் என்பது விரைவில் கண்டுபிடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதன், 14 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon