மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 21 செப் 2020

சமூக வாழ்க்கை அவசியம்!

 சமூக வாழ்க்கை அவசியம்!

விளம்பரம்

நாம் அனைவருமே சிறந்த மனிதர்களாக ஆசைப்படுகிறோம் அல்லது அந்த நோக்கத்தில் வளர்க்கப்படுகிறோம். ஆனால் ஒவ்வொரு காலகட்டத்திலும் சிறந்த மனிதனுக்கான வரையறை மாறுகிறது. கால மாற்றத்தில், அதன் உள்கட்டமைப்பும் மாற்றப்படுகிறது. தன்னளவில் போதுமான வசதிவாய்ப்புகளைப் பெறுவதே, இன்று சிறப்பாக வாழ்வதற்கான ஒரு மனிதனின் அடிப்படையாகப் பார்க்கப்படுகிறது. படிப்பு, வேலைவாய்ப்பு, திருமணம் அல்லது நடுத்தர வயது வாழ்க்கைக்கான தேவைகள் அனைத்தும் இதனை முன்வைத்தே நோக்கப்படுகிறது.

சிறுவயது முதலே இப்படியொரு நோக்கத்தைச் சொல்லியே வளர்க்கப்படுவதால், பயன்பாட்டைப் பொறுத்தே சுற்றத்தையும் உறவுகளையும் அணுகும் போக்கு வளர்கிறது. இதனால் உள்ளார்ந்த அன்போடும் அக்கறையோடும் சக மனிதர்களைப் பார்ப்பது சமூகத்தில் அரிதாகிப் போகிறது. தேவைகளோடு நின்றுவிடுகின்றன நட்பும் உறவும்.

தங்களது தனிப்பட்ட பிரச்சினைகளை ஒட்டுமொத்த சமூகத்தினால் மட்டுமே சரிசெய்ய முடியும் எனும்போது தான், மனிதம் சார்ந்த கேள்விகள் மேலெழுகிறது. சக மனிதனோடு பிணைப்பை ஏற்படுத்த வேண்டிய கட்டாயத்தை உண்டாக்குகிறது. அந்த நேரத்தில், மனிதர்களை எதிர்கொள்வதே பெரிய கலை என்றாகிறது. அதனைக் கைக்கொள்வது பெரும்பாடாகிப் போகிறது. இதனைக் கற்றுக்கொள்ளாதவர்கள் சக மனிதர்களைத் தூற்றுகிறார்கள் அல்லது தன்னையே நொந்துகொள்கிறார்கள். ஒருகட்டத்தில் இவர்களது வெற்றுப்புலம்பல்கள் மனநோயாகவும் உருமாறுகிறது.

இதனைத் தவிர்க்க தக்க மனநல ஆலோசனைகள் அவசியம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, இதில் விதிவிலக்கில்லை. ஊரோடு ஒத்துவாழ் எனும் பழமொழிக்கேற்ப, சமூக வாழ்க்கை சிறப்பாக அமையவேண்டியது அவசியம். அதனை ஏற்படுத்தித் தர, மனித மாண்பு பற்றிய ஆலோசனைகள் மூலமாக உங்கள் வாழ்க்கையை உலக இயல்புக்குள் செலுத்துகிறது மைண்ட் ஸோன் மருத்துவமனை. இதனை மருத்துவ உளவியல் நிபுணர் சுனில் குமார் மற்றும் உளவியல் மருத்துவர் ஜெயசுதா காமராஜ் ஆகியோர் நிர்வகித்து வருகின்றனர்.

மேலும் விவரங்களுக்கு:

மைண்ட் ஸோன்
நம்பர் 58/2, முதல் அவென்யூ,
சாஸ்திரி நகர், அடையார்,
சென்னை – 600020
இமெயில்: [email protected]
அலைபேசி: 044-24460101, 9444297058, 9176055660

விளம்பர பகுதி

வெள்ளி, 9 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon