மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 3 ஜுன் 2020

மந்த நிலையில் பொருளாதார வளர்ச்சி!

மந்த நிலையில் பொருளாதார வளர்ச்சி!

2019ஆம் ஆண்டில் இந்தியா 7.3 விழுக்காடு மட்டுமே வளர்ச்சி காணுமென்று மூடிஸ் ஆய்வு கூறியுள்ளது.

சர்வதேச கடன் மதிப்பீட்டு நிறுவனமான மூடிஸ் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், 'நீண்டகாலமாக பணப்புழக்கத்தில் காணப்பட்ட மந்த நிலையால் தனியார் கடன் நிறுவனங்களின் கடன் வழங்கும் விகிதம் குறைந்துள்ளது. சர்வதேச அளவில் காணப்படும் எண்ணெய் விலை நிலவரங்கள், ரூபாய் மதிப்பு வீழ்ச்சி போன்ற காரணங்களால் உள்நாட்டு தேவை குறைந்துள்ளது. இதனால் கடன் மதிப்புகளும் உயர்ந்து வருகிறது.

எனவே இந்தியப் பொருளாதார வளர்ச்சி அடுத்த நிதியாண்டில் குறையுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. 2018ஆம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.4 விழுக்காடாக இருந்தது. 2019, 2020ஆம் நிதியாண்டுகளில் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7.3 விழுக்காடாகக் குறையும். இந்தியா மட்டுமின்றி சீனா, மெக்சிகோ, துருக்கி, அர்ஜென்டினா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளிலும் 2017ஆம் ஆண்டைக்காட்டிலும் 2018ஆம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி குறைந்துள்ளது' என்று கூறப்பட்டுள்ளது.

ஜி20 நாடுகளின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 2017ஆம் ஆண்டிலிருந்த 5.3 விழுக்காடு வளர்ச்சியிலிருந்து, 2018ஆம் ஆண்டில் 5 விழுக்காடாக சரிந்துள்ளது என்றும் மூடிஸ் ஆய்வு கூறியுள்ளது.

வெள்ளி, 9 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon