மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 15 ஜன 2021

சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு!

சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு!

சமையல் சிலிண்டர் விநியோகர்களுக்கான கமிஷன் தொகை உயர்த்தப்பட்டுள்ளதால் சிலிண்டர் விலையும் ரூ.2 உயர்த்தப்பட்டுள்ளது.

உள்நாட்டு சிலிண்டர் விநியோகர்களுக்கான கமிஷன் தொகை 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.50.58 ஆகவும், 5 கிலோ எடை கொண்ட சிலிண்டருக்கு ரூ.25.29 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் 2017 செப்டம்பரில் இவற்றின் கமிஷன் தொகை முறையே ரூ.48.89 மற்றும் ரூ.24.20 ஆக இருந்தது. மத்திய எண்ணெய் அமைச்சகம் இந்த அறிவிப்பை வெளியிட்டவுடனேயே சமையல் சிலிண்டரின் விற்பனை விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, தேசியத் தலைநகர் டெல்லியில் ரூ.505.34க்கு விற்பனை செய்யப்பட்ட மானிய சிலிண்டரின் விலை தற்போது ரூ.507.42 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த மாதத்தில் மட்டும் 9 நாட்களில் இரண்டாவது முறையாக சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது. நவம்பர் 1ஆம் தேதி சிலிண்டரின் விலை ரூ.2.94 உயர்த்தப்பட்டிருந்தது. சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட்டதிலிருந்தே ஜூன் மாதத்திலிருந்து ஒவ்வொரு மாதமும் சமையல் சிலிண்டரின் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. இதுவரையில் மொத்தமாக ரூ.16.21 உயர்த்தப்பட்டுள்ளது. சிலிண்டர் விலை சென்னையில் ரூ.495.39 ஆகவும், மும்பையில் ரூ.505.05 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.510.70 ஆகவும் இருக்கிறது.

வெள்ளி, 9 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon