மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 6 டிச 2019

காய்ச்சலைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் நியமனம்!

காய்ச்சலைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் நியமனம்!

தமிழகத்தில் பரவிவரும் காய்ச்சலைக் கட்டுப்படுத்த, 42 சுகாதார மாவட்டங்களிலும் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார் தமிழகச் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர்.

தற்போது, தமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு விதமான காய்ச்சல்கள் பரவி வருகின்றன. இன்று மட்டும், பன்றிக் காய்ச்சல் பாதிப்பினால் 6 பேர் பலியாகியுள்ளனர். தமிழகம் முழுவதுமுள்ள பல மாவட்டத் தலைமை மருத்துவமனைகளில், காய்ச்சல் பாதிப்புக்குள்ளானவர்கள் அனுமதிக்கப்பட்டு, தனிப்பிரிவில் அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காய்ச்சலைத் தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது தமிழக அரசு.

இன்று (நவம்பர் 9) புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு ராணியார் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் காய்ச்சல் மற்றும் தொற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார் தமிழகச் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர்.

இதையடுத்து, அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். “தமிழகத்தில் டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இதைக் கட்டுப்படுத்துவதற்குத் தமிழகத்திலுள்ள 42 சுகாதார மாவட்டங்களிலும் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்” என்று அவர் தெரிவித்தார்.

தேவைப்பட்டால் கூடுதல் செவிலியர்களை நியமித்துக் கொள்ள அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

வெள்ளி, 9 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon