மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 11 டிச 2019

அணியில் திடீர் மாற்றம்: காரணம் என்ன?

அணியில் திடீர் மாற்றம்: காரணம் என்ன?

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான மூன்றாவது டி- 20 போட்டியில் சில அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையே டி-20 போட்டித் தொடர் நடந்து வருகிறது. இதன் முதல் இரண்டு ஆட்டங்களிலும் இந்தியா வென்று தொடரைக் கைப்பற்றிய நிலையில் மூன்றாவது போட்டி நவம்பர் 11ஆம் தேதி இரவு 7 மணிக்கு சென்னையில் நடக்கவுள்ளது. இதில் இந்தியா தோற்றாலும்கூட இந்திய அணிக்குக் கோப்பை வந்துவிடும்.

ஆனால் எந்தத் தொடரையும் வெற்றியுடன் முடிக்கும்போதுதான் அந்த அணி அடுத்த போட்டிக்குத் தயாராகும்போது புத்துணர்வோடு களமிறங்கும். அந்த வகையில் இந்தியாவுக்கு இது முக்கியமான போட்டியாகவே அமைந்துள்ளது. போலவே மேற்கிந்தியத் தீவுகள் அணியும் இதில் வென்று ஆறுதல் வெற்றியையாவது பெறத் திட்டம் போடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் 3ஆவது போட்டியில் விளையாடவுள்ள இந்திய அணியிலிருந்து பந்துவீச்சாளர்களான ஜஸ்பிரீத் பும்ரா, உமேஷ் யாதவ் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் நீக்கப்பட்டு அவர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஐபிஎல்லில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடிய வேகப் பந்துவீச்சாளர் சித்தார்த் கவுல் அணியில் புதிதாக இணைந்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியினர் தமது உடல் தகுதியை கட்டுக்குள் வைத்திருக்கவேண்டும் எனக் கருதியே குறிப்பிட்ட இந்த வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கும் இந்த முடிவை பிசிசிஐ எடுத்துள்ளது.

வெள்ளி, 9 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon