மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 11 டிச 2019

தினகரன் வீட்டில் விக்கிரகங்கள்? - நமது அம்மா

தினகரன் வீட்டில்  விக்கிரகங்கள்? - நமது அம்மா

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் தினகரன் வீட்டில் பல கோடி ரூபாய் மதிப்பிலான விக்கிரகங்கள், சாமிகள் திருவீதி உலா காண அமர்ந்து செல்கிற காமதேனு உள்ளிட்ட வாகனங்கள் இருப்பதாக பரபரப்பு தகவலை வெளியிட்டிருக்கிறது அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மா.

தினகரனை தொடர்ந்து மிகக் கடுமையாக விமர்சித்து எழுதி வருகிறது நமது அம்மா நாளேடு. அந்நாளேட்டின் இன்றைய (நவம்பர் 9) பதிப்பின் 4-ம் பக்கத்தில் “ஆங்கில ஏட்டுச் செய்தியும் ஆச்சரியப்படுத்தும் சிலைகளும்” என்ற தலைப்பில் ஒரு விமர்சனம் வெளியிடப்பட்டிருக்கிறது. அதன் விவரம்...

“சென்னை என்கிற இந்த ஊருக்கே சொந்தக்காரரான சென்னப்ப நாயக்கரின் வீட்டை விடவும் செட்டிநாட்டு அரசர் எம்.ஏ.எம். ராமசாமி பங்களாவுக்கு நிகராகவும் ஸ்பிக் ஏ.சி. முத்தையாவின் பங்களா வீட்டிற்க்கு போட்டியாகவும் மிகப் பிரம்மாண்டமாக சென்னையில் வீடு வைத்திருப்பவர் திகார்கரன். அவர் தனது ஆர்.கே.நகர் வேட்புமனுவில் டிக்ளர் செய்திருக்கும் சொத்துக்களின் மதிப்பு ரூ74 லட்சம்தான்.

ஆனால் அவரைப் பார்க்க அவரது வீட்டுக்குப் போய் வருபவர்கள் வாய் பிளந்த வண்ணம் பேசிக் கொள்கிற சேதி, தினகரன் வீடெங்கும் பரப்பி வைத்திருக்கிற பல கோடி மதிப்புள்ள விக்கிரகங்களையும் சாமிகள் திருவீதி உலா காண அமர்ந்து செல்கிற காமதேனு உள்ளிட்ட வாகனங்களையும்தான்.

அப்படி இல்லையெனில் சிலைத் தடுப்பு பிரிவினரை வைத்து அவர் வீட்டில் இருக்கும் சிலைகள், பீடங்கள், திருவீதி உலா வாகனங்கள் குறித்து கணக்கெடுத்து அவற்றின் மதிப்புகளையும் டைம்ஸ் ஆப் இந்தியா மக்களுக்குச் சொன்னால் இன்னும் நன்னா இருக்குமே”

இவ்வாறு நமது அம்மா நாளேட்டில் எழுதப்பட்டுள்ளது.

கடந்த 7ஆம் தேதியன்று டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டில் டிடிவி தினகரன் அளித்த பேட்டி வெளியாகியிருந்தது. அதில் இடம்பெற்ற புகைப்படத்தை வைத்துதான், ‘நமது அம்மா’ இந்த சந்தேகத்தை கிளப்பியுள்ளது.

வெள்ளி, 9 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon