மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 6 டிச 2019

கேஸ் அடுப்பை மறந்துட்டீங்க: அப்டேட் குமாரு

கேஸ் அடுப்பை மறந்துட்டீங்க: அப்டேட் குமாரு

அங்க பத்து பேரு பேனரை கிழிச்சுகிட்டு இருக்காங்க, இந்த பக்கம் பத்து பேரு மிக்ஸி கிரைண்டரை தூக்கி எறிஞ்சுகிட்டு இருக்காங்க. எதுக்கு நம்ம மேலே பட்டுட போகுதுன்னு நகர்ந்து வந்துட்டேன். இதாவது பரவாயில்லை பேனரை கிழிச்சதுல கடுப்பான நண்பாஸ் சில பேரு அரிவாள், கத்தி எல்லாம் வச்சுகிட்டு செல்ஃபி வீடியோ போட்டுகிட்டு இருக்காங்க. நல்ல வேளை இலவச கேஸ் அடுப்பு கொடுத்தாங்கன்னு சிலிண்டரோட சேர்த்து அதையும் தூக்கி நெருப்புல போடல.. போட்டு இருந்தா என்ன ஆகியிருக்கும்.. அய்யயோ நான் சொல்லிட்டேன்னு அதையும் ட்ரை பண்ணிடாதீங்க. போதும் நாலு நாளா ஆச்சு. கான்செப்டை மாத்திவிடுங்க கடுப்பாகுது.. சரி நீங்க கூலா அப்டேட்டை பாருங்க.

@shivaas_twitz

இன்னைக்கு ஆபீஸ்ல எல்லோரும் தீபாவளி பலகாரம் கொண்டு வந்து கொடுத்து சாப்பிட சொல்றாங்க...

இதான்... மாட்டுனா எல்லாரும் மொத்தமா மாட்டுவானுங்க மொமெண்ட்..!

@Raghavendra Aara

எம்.ஜி.ராமச்சந்திரன் என்ற எம்.ஜி.ஆரையும் அவரது மனைவி ஜானகியையும் காதல் கதாபாத்திரங்களுக்கு வைத்து அவர்களுக்கு கடைசி வரை கல்யாணமே ஆகாமல் படம் எடுத்த 96 படமும் அதிமுகவை அவமதிக்கிறது என்கிறேன் நான்....

என்ன நான் சொல்றது...?

@Da_galti

அரசாங்கம் இலவசமா கொடுத்த பொருளலாம் உடைக்கிறானுங்களாம்..

பாத்துடா உங்க ஆயா,தாத்தா,அம்மா,அப்பா லாம் அரசாங்கத்தோட இலவச மருத்துவமனைல பொறந்தாங்கன்னு கொண்ணுட போறீங்க...

@amuduarattai

"கடன்" என்ற வார்த்தை தரும் பயத்தை போக்கவே, "லோன்" என்ற வார்த்தை தோன்றியது.

@parveenyunus

திருடுறதுன்னு முடிவு பண்ணிட்டா நல்ல கதையா திருடணும் - எச்.ராஜா

- மன்னிப்பு கேக்கறதுன்னு முடிவு பண்ணிட்டா பப்ளிக்ல வீராவேசமா பேசாம இருக்கணும்.

@imparattai

டாடி எனக்கொரு டவுட்டு:

சர்ச்சைக்குரிய அரசியல்வாதிகளை கட்சியிலிருந்து நீக்க சொன்ன என்ன நிலைமையாகும்?

@mohanramko

'என்னத்த வாரிக்கிட்டு போயிட போறாங்கனு' நினைக்காதீங்க...

ஏரியில் இருக்கும் மணலாகவும் இருக்கலாம்...

@parveenyunus

சர்கார் பட தயாரிப்பாளர், நடிகர் விஜய் மீது சட்டப்படி நடவடிக்கை : அமைச்சர் சி.வி. சண்முகம் #

ப்ரிவ்யூ காட்சிக்கு ஏன் கூப்பிடலேன்னா..?

@amuduarattai

செய்தி: மதுரையில் AIIMS மருத்துவமனை அமையும் என அறிவித்தபின் மேற்கொள்ளப்பட்ட பணிகள் என்னென்ன? - உயர்நீதிமன்றம்.

'இதுக்கு காரணம் நாங்க தான்' என அதிமுகவும், பாஜகவும் மார்தட்டிக் கொண்டது தான்.

@Thaadikkaran

சிவா மனசுல சக்தி படத்துல வந்த சந்தானமும் சிவக்குமாரும் ஒண்ணு, ரென்டு பேருக்கும் மொபைல் போன் செட்டாகவே இல்லை..!!

@Annaiinpillai

வீட்டில் இருக்கும் அப்பாக்களின் நிலைமை கார்ட்டூன்களுக்கும், சீரியல்களுக்கும் நடுவில் பயணிக்கிறது!

@HAJAMYDEENNKS

தடை செய் தடை செய் சர்காரை தடை செய் என அதிமுகவினர் போராட்டம் - செய்தி #

என்னங்கய்யா உங்க சர்காரை நீங்களே தடை செய்ய சொல்றிங்க !

@Kadharb32402180

பாலியல் அத்துமீறல் வழக்கில் சென்னையை சேர்ந்த சாமியாரை பிடிக்க தனிப்படை அமைப்பு - செய்தி #

சமீபகாலமா தனிப்படை அமைப்பு னு செய்தி கேட்டாலே S.V சேகர் நியாபகம் தான் வருது

@shivaas_twitz

முருகதாஸை வைத்து படம் தயாரிக்க முடிவு செய்துவிட்டால், கதையை மட்டும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா காசு கொடுத்து வாங்கிடணும்...

பப்ளிசிட்டி இலவசம்..!

@Thaadikkaran

தமிழ்நாட்டுல டெங்கு காய்ச்சல் அதிகமா பரவுறதுனாலே, டெங்கு கொசு உற்பத்தி ஆவதில் தமிழகம் முதலிடம்னு பெருமையா சொல்ல முடியாத கையறு நிலை அமைச்சர்களுக்கு..!!

@yugarajesh2

நடிகர் விஜய் நன்றியோடு இல்லைன்னு அமைச்சர்களிடம் எடப்பாடி விவரித்தாராம்.என்னமோ? இவரு முதல்வர் பதவியை தனக்கு அளித்த சசிகலாவுக்கு நன்றியோடு இருக்கிற மாதிரி

@HAJAMYDEENNKS

ஆனால் இந்த போலீஸ்தான் பாவம்..போராட்டம் பண்றதையும் கண்டுக்காமல் இருக்கணும் பாதுகாப்பும் கொடுக்கணும் !

@gips_twitz

சர்கார் படத்தை ஜெயலலிதா இருந்தபோது எடுத்திருந்தால் அவர்களை வீரர்களாக கருதலாம் - டிடிவி தினகரன்

ஜெயலலிதா இல்லாதப்பவும் கட்சிக்குள்ள நுழைய முடியலயே இத என்ன சொல்றதுண்ணே...

@amuduarattai

செய்தி: 80 சதவீத களப்பணியாளர்கள் தயாராக இருப்பதால், இடைத்தேர்தலில் போட்டி. -கமல்ஹாசன்.

உங்களுக்கு ஓட்டு போட எத்தனை சதவீத மக்கள் தயார்.!?

@motheen_farook

விஜய்யின் கண் அசைவிற்காக காத்திருக்கிறோம் - விஜய் ரசிகர்கள்

எடப்பாடி கண் அசைவிற்க்காக காத்திருக்கிறோம் - அதிமுக தொண்டர்கள்

மோடி கண் அசைவிற்க்காக காத்திருக்கிறோம் - எடப்பாடி

-லாக் ஆஃப்

வெள்ளி, 9 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon