மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 6 டிச 2019

ரூ. 5.78 கோடியை செலவு செய்த கொள்ளையர்கள்!

ரூ. 5.78 கோடியை செலவு செய்த கொள்ளையர்கள்!

சேலம் – சென்னை ரயிலின் மேற்கூரையைத் துளையிட்டு 5.78 கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், கொள்ளையடித்த பணத்தை பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குமுன்பே செலவு செய்துவிட்டதாக போலீசாரின் விசாரணையில் கொள்ளையர்கள் தெரிவித்துள்ளனர்.

2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் தேதியன்று, சேலம் – சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலின்மேற்கூரையில் துளையிட்டு, 5.78 கோடி ரூபாயைத் திருடினர் கொள்ளையர்கள். சென்னை ரிசர்வ்வங்கிக்குக் கொண்டுசெல்வதற்காக வைக்கப்பட்டிருந்த 323 கோடி ரூபாயில் இருந்து, அவர்கள்இந்த தொகையைக் கொள்ளையடித்தனர்.

இது குறித்து விசாரணை செய்த ரயில்வே போலீசார், சிசிடிவி ஆதாரங்களைச் சோதித்தனர்.இதுகுறித்த விசாரணை தொடர்ந்தாலும், அதில் முடிவு ஏதும் எட்டப்படவில்லை. இதையடுத்து,சிபிசிஐடி பிரிவுக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. இந்த சம்பவத்தில், 2 ஆண்டுக்கு பிறகுமத்தியபிரதேசத்தை சேர்ந்த 7 பேரை கடந்த மாதம் கைது செய்தனர் சிபிசிஐடி போலீசார்.

இவர்களை 14 நாள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர் சிபிசிஐடி போலீசார்.இந்த கொள்ளையில் தொடர்புடையவர்கள் மேலும் சிலர் பஞ்சாப், ஹரியானா ஆகியமாநிலங்களில் உள்ள சிறைகளிலும் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களையும் நீதிமன்றஅனுமதியுடன் காவலில் எடுத்து விசாரணை நடத்துவதற்கு சிபிசிஐடி போலீசார் அந்தந்தஇடங்களில் முகாமிட்டுள்ளனர்.

இந்நிலையில், 7 பேரிடம் சிபிசிஐடி போலீசார் சென்னையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த விசாரணையில் கொள்ளையடித்த பணத்தை பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முன்பே பங்குபிரித்து, செலவழித்து விட்டதாக கொள்ளையர்கள் வாக்குமூலம் அளித்துள்ளதாக சிபிசிஐடிபோலீசார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அவற்றை தங்கமாக அல்லது சொத்துகளாக மாற்றியிருக்கிறார்களா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர் சிபிசிஐடிபோலீசார்.

வெள்ளி, 9 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon