மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 11 டிச 2019

ஜோதிகாவின் வேற லெவல் 'ஹலோ'!

ஜோதிகாவின் வேற லெவல் 'ஹலோ'!

நடிகை ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள காற்றின் மொழி திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ள நிலையில், அதில் சிம்பு சொல்லும் வசனம் கவனம் ஈர்த்து வருகிறது.

இந்தியில் வித்யாபாலன் நடித்த தும்ஹரி சுலு படம் தமிழில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. காற்றின் மொழி என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை தனஞ்ஜெயனின் பாஃப்டா மீடியா ஒர்க்ஸ் தயாரித்துள்ளது. ராதாமோகன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் வானொலி தொகுப்பாளராக ஜோதிகா நடித்துள்ளார். மேலும், விதார்த், லக்‌ஷ்மி மஞ்சு, மனோபாலா, எம்.எஸ்.பாஸ்கர், குமரவேல் போன்றோரும் நடித்துள்ளார்கள்.

ஏ.ஹெச். காஷிஃப் என்கிற புதிய இசையமைப்பாளர் இப்படத்தில் அறிமுகமாகிறார். இவர், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் சகோதரி ஃபாத்திமாவின் மகன்.

இதனிடையே இப்படத்தின் டிரெய்லர் நடிகர் கார்த்தி வெளியிட்டுள்ளார். குறும்புத்தனமான குடும்ப பெண்ணான ஜோதிகாவுக்கு, ஆர்.ஜே வேலை கிடைக்கிறது. அதனால் அவரது குடும்பத்தில் ஏற்படும் மகிழ்ச்சி, பிரச்சினைகள் எல்லாம் டிரெய்லரில் உணர்வுப்பூர்வமான காட்சிகளாக அமைந்துள்ளது.

இந்தப்படத்தில் சிம்பு கெஸ்ட் ரோலில் நடித்திருப்பது அனைவரும் அறிந்த ஒன்றே. அவரின் காட்சிகள் டிரெய்லர் கடைசியில் இடம் பெற்றுள்ளது. அதில் சிம்பு, ஜோதிகாவிடம், “உலகில் அதிகமான மக்கள் உபயோகிக்கும் வார்த்தை என்ன தெரியுமா ஹலோ. ஆனால் நீங்கள் சொல்லும் ஹலோ வார்த்தை வேற லெவல்” என்கிறார்.

தற்போது இந்த டிரெய்லர் ரசிகர்களிடத்தில் வரவேற்பைப் பெற்றுள்ளது. படம் வருகிற 16ஆம் தேதி வெளியாகிறது.

மேலும், கடந்த வருடம் செப்டம்பர் மாதம் வெளியான தும்ஹரி சுலு, ரூ. 20 கோடி பட்ஜெட்டில் உருவாகி, ரூ. 50 கோடி வசூலித்தது குறிப்பிடத்தக்கது.

காற்றின் மொழி டிரெய்லர்

வெள்ளி, 9 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon