மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 1 ஜுன் 2020

இயல்பு நிலை எப்போது திரும்பும்?

இயல்பு நிலை எப்போது திரும்பும்?

இந்தியாவின் கச்சா எண்ணெய்க்கான தேவை அடுத்த வருடத்தில் இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று ஃபிட்ச் நிறுவனம் தனது ஆய்வில் தெரிவித்துள்ளது.

நடப்பு ஆண்டில் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலையேற்றம் மற்றும் இந்திய ரூபாய் மதிப்பு சரிவு போன்ற காரணங்களால் இந்தியாவின் எண்ணெய் தேவையில் சரிவு ஏற்பட்டிருந்தது. இச்சரிவு மீண்டு அடுத்த ஆண்டில் எண்ணெய்க்கான தேவை அதிகரிக்கும் என்று ஃபிட்ச் ரேட்டிங்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ‘சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்க்கான தேவை உயருவதற்கு இந்தியாவின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். சீனாவின் பொருளாதார வளர்ச்சி மந்தமாக இருப்பதாலும், அந்த அரசு கச்சா எண்ணெய் தவிர்த்து இதர பிரிவுகளில் அதிகக் கவனம் செலுத்துவதாலும், இந்தியாவின் எண்ணெய் தேவை சர்வதேச வளர்ச்சிக்கு முக்கியக் காரணியாக இருக்கும்.

இந்த ஆண்டில் கச்சா எண்ணெய் பயன்பாடு 5.5 சதவிகிதமாக உள்ளது. அது 2019ஆம் ஆண்டில் 6 சதவிகிதமாக உயரும் என்று மதிப்பிடப்படுகிறது. எனினும், சீனா மற்றும் வளர்ந்த சந்தைகளில் எண்ணெய் பயன்பாடு குறையும் வாய்ப்பிருப்பதால் சர்வதேச அளவிலான வளர்ச்சி சற்று மந்தமாகவே இருக்கும். இந்தியாவைப் பொறுத்தவரையில் ரூபாய் மதிப்பு சரிவு பெரும் பிரச்சினையாகவே இருந்து வருகிறது. ஜனவரியில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 64 ரூபாயிலிருந்து அக்டோபரில் 74 ரூபாயாகச் சரிந்துள்ளது. இதோடு கச்சா எண்ணெய் விலையேற்றத்தால் இந்தியாவின் வர்த்தகத்தில் பின்னடைவு ஏற்படும் அபாயம் இருக்கிறது.

வெள்ளி, 9 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon