மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 6 டிச 2019

வசூலில் முந்திய 'தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்'!

வசூலில் முந்திய 'தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்'!

நடிகர் அமீர் கான் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்போடு வெளியாகி இருக்கும் தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் விவரம் வெளியாகியுள்ளது.

தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான் என்கிற படத்தில் முதல்முறையாக அமீர் கானும் அமிதாப் பச்சனும் இணைந்து நடித்துள்ளார்கள். கத்ரினா கைஃப், ஃபாத்திமா சனா சயிக் போன்றோரும் நடித்து, விஜய் கிருஷ்ணா ஆச்சார்யா இயக்கியுள்ள இந்தப் படம் நேற்று (நவம்பர் 8) வெளியானது.

இதுவரை இந்தப் படத்துக்கு எதிர்மறையான விமர்சனங்களே அமைந்துள்ளன. மிகவும் எதிர்பார்த்த இந்த அமீர் கான் படம் ஏமாற்றியுள்ளதாகப் பலரும் சமூகவலைதளங்களில் பதிவு எழுதியுள்ளார்கள். எனினும் முதல் நாளன்று அபார வசூலை பெற்றுள்ளது.

இந்தியாவில் இந்தி, தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளிலும் வெளியான தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான், முதல் நாளன்று மூன்று மொழிகளிலும் சேர்த்து வரி நீங்கலாக கிட்டத்தட்ட ரூ. 52 கோடி வசூலை பெற்று சாதனை படைத்துள்ளது. இதன்மூலம் 2018ஆம் ஆண்டு இந்தியாவில் முதல் நாளில் அதிக வசூலை பெற்ற படம் என்கிற சாதனையையும் படைத்துள்ளது.

இதற்கு முன்பு சஞ்சு படம் வரி நீங்கலாக ரூ. 34.75 கோடி வசூலைப் பெற்று முதல் இடம் பெற்றது. அதன் வசூலை தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான் முறியடித்துள்ளது. இந்த ஆண்டு வெளியான ‘ரேஸ் 3’ ரூ 29.17 கோடி, ‘கோல்டு’ ரூ. 25. 25 கோடி, ‘பாகுபலி 2’ ரூ.25. 10 கோடி என முதல் நாள் வசூலில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

மேலும், தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான் இந்தியில் ரூ. 50.75 கோடியும் தமிழ் மற்றும் தெலுங்கில் ரூ. 1.50 கோடி வசூலையும் பெற்றுள்ளது. இந்தியா முழுக்க 5000 திரையரங்குகளில் வெளியானது. எனினும் எதிர்மறை விமர்சனங்களால் வரும் நாட்களில் இதன் வசூல் எவ்வாறு அமையும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

வெள்ளி, 9 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon