மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 5 ஏப் 2020

இளவரசி சிறைக்குத் திரும்பினார்!

இளவரசி சிறைக்குத் திரும்பினார்!

சசிகலா உறவினர் இளவரசிக்கு வழங்கப்பட்ட 15 நாள் பரோல் முடிவடைந்த நிலையில், நேற்று மாலை அவர் பரப்பன அக்ரஹாரா சிறைக்குத் திரும்பினார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் 4 வருடங்கள் சிறை தண்டனை பெற்ற சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் கடந்த 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களை 15 நாட்களுக்கு ஒருமுறை தினகரன், விவேக் ஜெயராமன் உள்ளிட்ட உறவினர்கள் சிறையில் சந்தித்துப் பேசிவருகின்றனர்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பரோல் கேட்காத இளவரசி, முதல்முறையாக 15 நாட்கள் பரோல் கேட்டு சிறை நிர்வாகத்திடம் கடந்த மாதம் விண்ணப்பம் அளித்தார். தனது சகோதரருக்கு உடல்நிலை சரியில்லாததால் அவரை நேரில் பார்க்க வேண்டி அவர் பரோல் கேட்டிருந்தார். பரோல் மனுவை பரிசீலித்த சிறைத் துறை அதிகாரிகள், பல்வேறு நிபந்தனைகளுடன் இளவரசிக்கு 15 நாட்கள் பரோல் அளித்து உத்தரவிட்டனர்.

இதனையடுத்து கடந்த அக்டோபர் 25ஆம் தேதி சிறையிலிருந்து வெளிவந்த இளவரசி, சென்னையிலுள்ள தனது மகன் விவேக் இல்லத்தில் தங்கியிருந்தார். அவருடைய பரோல் காலம் நேற்றுடன் முடிவடைந்தது. இதனையடுத்து அவர் நேற்று மாலை பெங்களூரு சிறைக்குத் திரும்பினார்.

வெள்ளி, 9 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon