மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 2 ஜுன் 2020

கோவையில் நம்ம ஊரு சந்தை!

கோவையில் நம்ம ஊரு சந்தை!

நவம்பர் 11ஆம் தேதி கோயம்புத்தூரில் தற்சார்பு வாழ்வியலுக்கான மரபுக் கூடல் - நம்ம ஊரு சந்தை நடைபெறுகிறது.

இயற்கை உணவு, சிறு தானியங்களின் பயன்களை மக்களுக்கு உணர்த்துவதற்காக 'நம்ம ஊரு சந்தை' என்னும் அமைப்பின் மூலம் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சிப் பள்ளியில் சிறப்புச் சந்தை மற்றும் பயிற்சி நடைபெறுகிறது. இதில் பாரம்பரிய முறையில் மூலிகைகள் மற்றும் காய்கறிகளில் ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி வழங்கப்படுகிறது. இதற்கு முன்னர் திருப்பூரில் சிறப்பாக ஊறுகாய் வகைகளைச் செய்து காண்பித்து விளக்கமளித்த ராமலெட்சுமி பிரகாஷ் குடும்பத்தினர் இதற்கான செய்முறைப் பயிற்சி வழங்குகின்றனர்.

காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை பயிற்சி நடைபெறும். இச்சந்தையில், பாரம்பரிய அரிசி வகைகள், சீர்தானியங்கள், அவல் வகைகள், பயறு வகைகள், மரச்செக்கு எண்ணெய் வகைகள், இயற்கை வழி வேளாண்மையில் விளைய வைக்கப்பட்ட காய்கறிகள், கீரைகள், தக்காளி, சின்ன வெங்காயம், தேங்காய், நெல்லிக்காய், தேன்வாழை, செவ்வாழை, நேந்தரம், ரஸ்தாளி, கறிவாழை, கதலி போன்ற வாழைப்பழ வகைகள், பனங்கருப்பட்டி , பனங்கற்கண்டு, பனையோலைப் பொருட்கள், நாட்டுச் சர்க்கரை, மஞ்சள் தூள், தேன், பனையோலை பயன்பாட்டுப் பொருட்கள், வெட்டிவேர் மற்றும் வாழை நார் கைவினைப் பொருட்கள், மண்பாண்ட பயன்பாட்டுப் பொருட்கள், நாட்டுக் காய்கறி விதைகள், சூழலியல் புத்தங்கள், மாடித் தோட்டம் சம்பந்தமான பொருட்கள் போன்றவை விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி, 9 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon