மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 9 நவ 2018

களத்திற்கு வந்த ‘பந்துவீச்சின் டி வில்லியர்ஸ்’

களத்திற்கு வந்த ‘பந்துவீச்சின் டி வில்லியர்ஸ்’

சுழல் பந்துவீச்சாளர் ஒருவர் ஆட்டத்தின்போது 360 டிகிரியில் பந்துவீசிய நிகழ்வு சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

கிரிக்கெட்டில் ஏபி டி வில்லியர்ஸ் போன்றோர் களத்தின் அனைத்துப் பக்கங்களிலும் அதாவது 360 டிகிரியிலும் மட்டையைச் சுழற்றி ரன்களைச் சேர்ப்பதைக் கண்டிருக்கலாம். அதுபோல 360 டிகிரியில் சுற்றிவந்து பந்து வீசி கிரிக்கெட் வட்டாரத்தின் கவனத்தை ஈர்த்துள்ளார் ஷிவா சிங் எனும் வீரர். 23 வயதுக்கு உட்பட்டோருக்கான சிகே நாயுடு கோப்பையில் பெங்கால் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில்தான் இது அரங்கேறியுள்ளது.

நான்கு நாட்கள் கொண்ட இந்தப் போட்டியில் உத்தரப் பிரதேச அணிக்காகக் களமிறங்கிய ஷிவா சிங் வழக்கமான முறையில் பந்துவீசிக்கொண்டிருக்கும்போது திடீரென ஒரு பந்தை 360 டிகிரியில் ஒரு சுற்று சுற்றிவந்து வீசினார். இதைக் கண்ட நடுவர் உடனே அதை ‘டெட் பால்’ என அறிவித்தார். பந்துவீச்சாளரும் அவரது சக வீரர்களும் எவ்வளவோ விளக்கியும் அதை நடுவர் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் போட்டியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

பின்னர் இந்த விவகாரம் குறித்து ஈஎஸ்பிஎன் க்ரிகின்ஃபோ மீடியாவிடம் கருத்துத் தெரிவித்த ஷிவா சிங், “ நான் இதுபோல பல பரிமாணங்களில் பந்து வீசிவருகிறேன். இந்தப் போட்டியிலும் அதையே செய்தேன். நடுவர் இதை டெட் பால் எனக் கூறியதால் அவரிடம் அதுகுறித்த காரணம் கேட்டேன்.

விஜய் ஹஸாரே போட்டியில் கேரள அணிக்கு எதிராக இதுபோல பந்துவீசியுள்ளேன். எந்த எதிர்ப்பும் அப்போது இல்லை. மட்டையாளர்கள் ஸ்வீப் ஷாட் எனும் பெயரில் திரும்பி நின்றுகூட விளையாடுகிறார்கள், ஆனால் பந்து வீச்சாளர்கள் மட்டும் அவ்வாறு செய்தால் அதை டெட் பால் என்கின்றனர்” என்றார்.

நடுவரின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கிரிக்கெட் வட்டாரத்தில் பலர் கருத்து தெரிவித்து வரும் நிலையில், நடுவரின் முடிவுக்கு சிலர் ஆதரவும் தெரிவித்துவருகின்றனர்.

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

4 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

காவலருடன் வாக்குவாதம்: வழக்கறிஞர் விரைவில் கைது!

4 நிமிட வாசிப்பு

காவலருடன் வாக்குவாதம்: வழக்கறிஞர் விரைவில் கைது!

வெள்ளி 9 நவ 2018