மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 9 நவ 2018

எம்ஜிஆர் பிறந்தநாள்: 1,457 கைதிகள் விடுதலை!

எம்ஜிஆர் பிறந்தநாள்: 1,457 கைதிகள் விடுதலை!

எம்ஜிஆர் பிறந்தநாள் நூற்றாண்டை முன்னிட்டு 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்கும் 1,457 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்கும் கைதிகள், எம்ஜிஆர் பிறந்தநாள் நூற்றாண்டை முன்னிட்டு விடுதலை செய்யப்படுவார்கள் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 161இன் படி, மாநில ஆளுநரின் அதிகாரத்தைப் பயன்படுத்தியும், உச்ச நீதிமன்றம் மற்றும் மாநில உயர் நீதிமன்றங்களின் வழிகாட்டுதலின்படியும், நெறிமுறைகள் குறித்த ஆணைகள் வெளியிடப்பட்டு, விடுதலை செய்யத் தகுதியான கைதிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

இதையடுத்து, தமிழகம் முழுவதும் 10 ஆண்டுகளுக்கு மேலாகச் சிறையில் இருந்துவரும் 1,775 கைதிகளை விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டது. இந்த பட்டியல் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவரும் இதற்கு ஒப்புதல் அளித்தார். அதன்படி, இதுவரை 1,457 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள 219 கைதிகள் இம்மாத இறுதிக்குள் விடுதலை செய்வதற்கான வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, அதன்பின் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்ட 23 கைதிகளில் 5 பேர் இதுவரை விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

வெள்ளி, 9 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon