மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 1 ஜுன் 2020

ஜிஎஸ்டி ரீஃபண்ட்: அரசு விளக்கம்!

ஜிஎஸ்டி ரீஃபண்ட்: அரசு விளக்கம்!

சரக்கு மற்றும் சேவை வரியின் கீழ் ஏற்றுமதியாளர்களுக்கு ரூ.82,775 கோடி ரீஃபண்ட் தொகையாக வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சென்ற ஆண்டின் ஜூலை மாதம் புதிய சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மத்திய அரசால் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. இதன்கீழ் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்புகளுக்கு மத்திய அரசு தரப்பிலிருந்து இழப்பீடு வழங்கப்படுவதோடு, ஜிஎஸ்டி வரி தாக்கலுக்கான ரீஃபண்ட் தொகையும் அரசு தரப்பிலிருந்து வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த ரீஃபண்ட் தொகை முறையாகக் கிடைப்பதில்லை எனவும், இதனால் தங்களது தொழில் முடங்கும் சூழல் உருவாகுவதாகவும் ஏற்றுமதியாளர்கள் தரப்பில் தொடர்ந்து புகார் அளிக்கப்பட்டு வருகிறது. ஜிஎஸ்டிக்கான ரீஃபண்ட் தொகை சரியாக வழங்கப்பட்டு வருவதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது. அக்டோபர் மாத இறுதி வரையில் 93.8 சதவிகித ரீஃபண்ட் தொகை வழங்கப்பட்டுவிட்டதாக மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.

இதுகுறித்து மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஏற்றுமதியாளர்களுக்கு வரவேண்டிய ரீஃபண்ட் தொகையில் ரூ.82,775 கோடிக்கான ஒப்புதல் அரசு தரப்பிலிருந்து வழங்கப்பட்டுள்ளது. அதில் ரூ.42,935 கோடி அக்டோபர் 31க்குள் வழங்கப்பட்டுவிட்டது. இன்னும் ரூ.5,400 கோடி மட்டுமே பாக்கி உள்ளது. இதை வழங்குவதற்கான செயல்பாட்டுப் பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன. அதாவது மொத்த ரீஃபண்ட் தொகையில் 93.8 சதவிகிதம் வழங்கப்பட்டுவிட்டது. ரூ.3,096 கோடி மதிப்பிலான ரீஃபண்ட் தொகையில் சில குளறுபடிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதுகுறித்து ஏற்றுமதியாளர்களிடமும் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளி, 9 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon