மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 3 ஜுன் 2020

ஹானர்: தீபாவளி ரேஸில் சாதித்தது எப்படி?

ஹானர்: தீபாவளி ரேஸில் சாதித்தது எப்படி?

தீபாவளியை முன்னிட்டு நடந்த தமது நிறுவன செல்போன் விற்பனையின் விபரத்தை அறிவித்துள்ளது ஹுவாயின் ஹானர் நிறுவனம்.

தீபாவளியை முன்னிட்டு வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் பல செல்போன் நிறுவனங்கள் களத்தில் இறங்கி தமது விற்பனையை முடுக்கிவிட்டனர். அதில் ஹுவாயின் ஹானர் எனும் செல்போன் நிறுவனமும் ஒன்று. ஃப்ளிப்கார்ட், அமேஸான், ஹானர் ஸ்டோர்களில் இதன் விற்பனை நடந்தது.

தற்போது தீபாவளி நிறைவடைந்துள்ளதையடுத்து, தீபாவளிக்கு தமது நிறுவன செல்போன்கள் எவ்வளவு விற்பனையாகின எனும் விபரத்தை நேற்று (நவம்பர் 8) அறிவித்துள்ளது ஹானர். அதன்படி 10 லட்சத்திற்கும் அதிகமான ஹானர் செல்போன்கள் விற்பனையாகியிருப்பதாகவும் இது கடந்த ஆண்டு தீபாவளி விற்பனையைவிட சுமார் 300 சதவிகிதம் அதிகமான வளர்ச்சி எனவும் கூறியுள்ளது ஹானர் தரப்பு.

வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் ஹானரின் 9N, 9 லைட், 7S, 9i, 7A, 10 போன்ற குறிப்பிட்ட மாடல்கள் தீபாவளியை முன்னிட்டு அதிரடி விலை குறைப்பு செய்யப்பட்டிருந்தன. எனவே இதுவே ஹானரின் இந்த தீபாவளி விற்பனை சாதனையில் முக்கிய பங்காக அமைந்திருக்க வாய்ப்புள்ளது.

வெள்ளி, 9 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon