மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 26 மே 2020

ஏ.ஆர்.முருகதாஸ் கைதா?: நள்ளிரவில் ஏற்பட்ட பரபரப்பு!

ஏ.ஆர்.முருகதாஸ் கைதா?: நள்ளிரவில் ஏற்பட்ட பரபரப்பு!

சர்கார் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் உள்ளிட்ட பல அமைச்சர்கள் பேசிவருகின்றனர். நேற்று மதியம் தலைமைச் செயலகத்தில் சர்கார் பட இயக்குநர், தயாரிப்பாளர், திரையரங்கு உரிமையாளர்கள் உள்ளிட்டோர் மீது வழக்கு தொடுப்பது குறித்து சி.வி.சண்முகம் தலைமை வழக்கறிஞருடன் சட்ட ஆலோசனை மேற்கொண்டார். தமிழகம் முழுவதும் பல்வேறு நகரங்களில் சர்கார் படம் திரையிடப்பட்ட திரையரங்குகளில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். படத்தின் பேனர்களை கிழித்து ரகளையில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் நேற்று இரவு 10.53 மணிக்கு தயாரிப்பு தரப்பான சன் பிக்சர்ஸ் நிறுவனம் இயக்குநர் முருகதாஸை கைது செய்வதற்காக அவரது வீட்டிற்குக் காவல் துறையினர் சென்றுள்ளதாக ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டது. இதனால் பெரும் பதற்றம் உருவானது. அதன்பின்னர் சிறிது நேரத்தில் முருகதாஸைப் பற்றி காவல் துறையினர் விசாரித்துவிட்டு அவர் இல்லை என்பதால் அங்கிருந்து சென்றுவிட்டனர் என்று மற்றொரு பதிவை வெளியிட்டது.

இதற்கு காவல் துறை சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்வதற்காகச் செல்லவில்லை எனவும், வழக்கமான பாதுகாப்புப் பணிகளுக்காகவே சென்றதாகவும் காவல் துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இரவு 12 மணியளவில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், “இரவு நேரத்தில் போலீஸார் என் வீட்டுக்கு வந்து கதவை பலமுறை தட்டியுள்ளனர். நான் அங்கு இல்லை என்று தெரிந்ததும் அங்கிருந்து கிளம்பிவிட்டனர். தற்போது அங்கு எந்த போலீஸும் இல்லை” என்று ட்விட்டர் மூலம் தெரிவித்தார்.

வியாழன், 8 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon