மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 3 ஜுன் 2020

சர்கார் படத்துக்கு கமல் ஆதரவு!

சர்கார் படத்துக்கு கமல் ஆதரவு!

சர்கார் படத்துக்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திவரும் நிலையில் கமல்ஹாசன் ஆதரவளித்துள்ளார்.

அரசியல் அழுத்தம் காரணமாக படத்திற்கு தடைவிதிக்கக் கூடாது என்பதை கமல்ஹாசன் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். அவரது பல படங்களுக்குத் தமிழகத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. பெரும்பாலான படங்களைப் பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் தான் வெளியிட்டுள்ளார். இந்த நிலையில் விஜய்யின் சர்கார் படத்துக்கு அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதிமுக அமைச்சர்கள் பலரும் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசிவருகின்றனர்.

இந்த நிலையில் சர்கார் சர்ச்சை தொடர்பாக கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “முறையாகச் சான்றிதழ் பெற்று வெளியாகியிருக்கும் சர்கார் படத்துக்கு, சட்டவிரோதமான அரசியல் சூழ்ச்சிகள் மூலம் அழுத்தம் கொடுப்பது இவ்வரசுக்குப் புதிதல்ல. விமர்சனங்களை ஏற்கத் துணிவில்லாத அரசு தடம் புரளும். அரசியல் வியாபாரிகள் கூட்டம் விரைவில் ஒழியும். நாடாளப் போகும் நல்லவர் கூட்டமே வெல்லும்” என்று பதிவிட்டுள்ளார்.

விஸ்வரூபம் படத்தின்போது சென்சார் சான்றிதழ் பெற்ற பின்னர் இஸ்லாமியர்களைத் தவறாக சித்திரித்ததாகக் கூறி படத்துக்கு அப்போதைய அதிமுக அரசு தடைவிதித்தது. தற்போது தேவர் மகன் 2 படத்துக்கும் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வியாழன், 8 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon