மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 9 நவ 2018

பணமதிப்பழிப்பு: தற்போது கறுப்புப் பணம் இல்லையா?

பணமதிப்பழிப்பு: தற்போது கறுப்புப் பணம் இல்லையா?

பணமதிப்பழிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு இரண்டாண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது கறுப்புப் பணம் இல்லையா என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து பெரம்பலூர் - அரியலூர் மாவட்ட திமுக சார்பில் நேற்று (நவம்பர் 8) கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. ஒதியம் கலைஞர் நகரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு, பொன்முடி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இறுதியாக கண்டன உரையாற்றிய திமுக தலைவர் ஸ்டாலின், “புதிய பிரதமரை உருவாக்குவதற்காக நாடாளுமன்றத் தேர்தலை எதிர்நோக்கி நாம் காத்திருக்கிறோம். நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தல் வந்தாலும் அதனையும் சந்திக்கத் தயாராக உள்ளோம்” என்று தெரிவித்தார்.

பணமதிப்பழிப்பு குறித்து பேசிய ஸ்டாலின், “2016ஆம் ஆண்டு இதே நாளில் பணமதிப்பழிப்பு என்ற பெயரில் 120 கோடி மக்களையும் ஒரே நேரத்தில் பிரதமர் மோடி முட்டாளாக்கினார். இதனால் கறுப்புப் பணம் ஒழியும், ஊழல் அடியோடு ஒழிக்கப்படும், கள்ள நோட்டு தடுக்கப்படும், தீவிரவாதம் அகற்றப்படும் என சில புது விளக்கங்களையும் அவர் தந்தார். இன்றுடன் இரண்டு ஆண்டுகள் முடிந்துவிட்டது. தற்போது கறுப்புப் பணம் இல்லையா? ஊழல் இல்லையா? கள்ள நோட்டுகள் இல்லையா? தீவிரவாதம் ஒழிந்துவிட்டதா? இதனால் என்ன சாதித்தார் மோடி?” என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.

“ஆட்சிக்கு வந்தால் 100 நாட்களுக்குள் வெளிநாட்டில் இருக்கும் கறுப்புப் பணத்தை இந்தியா கொண்டுவந்து, மக்களின் வங்கிக் கணக்குகளில் 15 லட்ச ரூபாய் செலுத்துவேன் என்று மோடி அறிவித்தார். இதுவரை யார் வங்கிக் கணக்கிலாவது வெறும் 15 ரூபாயாவது போடப்பட்டிருக்கிறதா? அப்படி யாராவது சொன்னால் நான் மன்னிப்பு கேட்கத் தயார்” என்று தெரிவித்த அவர், வெளிநாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட கறுப்புப் பணத்தின் கணக்கு வெளியிடப்பட்டிருக்கிறதா என்ற கேள்வியையும் முன்வைத்தார்.

“வாக்குறுதிகளை அளித்துவிட்டு, அதனைப் பற்றி கவலைப்படாத வகையில் இருக்கிறார் மோடி. தேர்தலில் வெற்றிபெறுவதற்காக அவ்வாறு வாக்குறுதி அளித்தோம், வெற்றி பெறுவோம் என்று கருதியிருந்தால் அவ்வாறு வாக்குறுதி அளித்திருக்க மாட்டோம் என்று வெளிப்படையாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறுகிறார்” என்று விமர்சித்த ஸ்டாலின்,

இளைஞர்கள் அதிகளவில் பாதிக்கப்படுவதற்கு காரணம்!

3 நிமிட வாசிப்பு

இளைஞர்கள் அதிகளவில் பாதிக்கப்படுவதற்கு காரணம்!

ஆம்புலன்ஸில் காத்திருக்கும் நோயாளிகள்!

4 நிமிட வாசிப்பு

ஆம்புலன்ஸில் காத்திருக்கும் நோயாளிகள்!

தனியுரிமை கொள்கை: வாட்ஸ்அப் அதிரடி!

3 நிமிட வாசிப்பு

தனியுரிமை கொள்கை: வாட்ஸ்அப் அதிரடி!

வெள்ளி 9 நவ 2018