தினப் பெட்டகம் – 10 (9.11.2018)
துத்தநாகம் (Zinc) என்னும் தனிமம் பற்றிய சில தகவல்கள்:
1. துத்தநாகத்தின் அணு எண் (atomic number) 30.
2. உலோகக் குடும்பத்தைச் சேர்ந்த துத்தநாகம், செடிகளுக்கும் விலங்குகளுக்கும் மிகவும் அவசியம்.
3. பூமியின் மேற்பரப்பில் அதிகமாகக் கிடைக்கும் தனிமங்களில் துத்தநாகத்திற்கு 24ஆவது இடம்.
4. பூமியின் மேற்பரப்பில் 0.0075% துத்தநாகம் இருக்கிறது.
5. கடல் நீரில், ஒரு பில்லியன் பகுதிகளில் 30 பகுதிகள் துத்தநாகம்.
6. செம்பு போன்ற தனிமங்களுடன் இணைந்துதான் துத்தநாகம் பெரும்பாலும் கிடைக்கும்.
7. 87%க்கும் அதிகமாக துத்தநாகம் பயன்படுத்தி செய்யப்பட்ட சிலை ஒன்று, தற்போதைய ரொமானியாவில் உள்ளது.
8. துத்தநாகம் எரியும்போது அதன் நிறம் பிரகாசமான பச்சை - நீலமாக இருக்கும்.
9. தற்போது நமக்குக் கிடைக்கும் துத்தநாகம் 70% சுரங்கங்களில் இருந்தும், 30% மறுசுழற்சியில் இருந்தும் கிடைக்கிறது.
10. துத்தநாகம் மற்றும் செம்பினாலான பித்தளை, 3000 ஆண்டுகளுக்கும் அதிகமாகப் பயன்பாட்டில் இருந்து வருகின்றன.
- ஆஸிஃபா