மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 4 ஜூலை 2020

4 வாக்காளர்கள் மட்டுமே உள்ள கிராமம்!

4 வாக்காளர்கள் மட்டுமே உள்ள கிராமம்!

சத்தீஸ்கரில் நான்கு வாக்காளர்கள் மட்டுமே உள்ள கிராமத்தில் வாக்குச் சாவடி அமைக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

சத்தீஸ்கரில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. முதல்கட்டமாக 18 தொகுதிகளுக்கு நவம்பர் 12ஆம் தேதியும், இரண்டாவது கட்டமாக நவம்பர் 20ஆம் தேதியும் தேர்தல் நடத்தப்படவுள்ளது. இந்தத் தேர்தலில் அனைவரும் வாக்குகளைப் பதிவு செய்ய வேண்டும் என்பதில் தேர்தல் ஆணையம் உறுதியாக உள்ளது. அதற்கான முயற்சிகளையும் முன்னெடுத்து வருகிறது.

அந்த வகையில் நான்கு வாக்காளர்கள் மட்டுமே உள்ள செராந்தந்த் கிராமத்தில் வாக்குச் சாவடி அமைக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. பரத்பூர் - சோன்ஹாத் எம்.எல்.ஏ. தொகுதியில் உள்ளது செராந்தந்த் கிராமம். இங்கு மொத்தமே நான்கு வாக்காளர்கள்தான் உள்ளனர். அவர்களில் மூன்று பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

நதியைக் கடந்து மலைப் பாதையில் ஆறு கிலோமீட்டர் பயணித்தே இந்தக் கிராமத்தை அடைய முடியும். சரியான சாலை வசதி இல்லாததால் தேர்தலுக்கு முந்தைய நாளே தேர்தல் அதிகாரிகள் அங்கு செல்லவுள்ளனர்.

இதுதொடர்பாக மாவட்டத் தேர்தல் அதிகாரி என்.கே.துக்கா செய்தியாளர்களிடம் கூறுகையில், “தேர்தல் நடத்துவதற்கு ஒருநாள் முன்பாக அதிகாரிகள் அங்கு சென்று வாக்களிப்பதற்கு ஏதுவாக முகாம் அமைப்பார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

வியாழன், 8 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon