மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 4 ஜூலை 2020

பெட்ரோல் விலை தொடர் சரிவு!

பெட்ரோல் விலை தொடர் சரிவு!

தீபாவளிக்குப் பிறகும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது.

சென்னையில் நவம்பர் 7ஆம் தேதி பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு 81.46 ரூபாயாகவும், டீசல் விலை 77.24 ரூபாயாகவும் இருந்தது. ஆனால் இன்று பெட்ரோல் 22 காசுகள் விலை குறைந்து 81.24 ரூபாயாகவும், டீசல் 19 காசுகள் விலை குறைந்து 77.05 ரூபாயாகவும் உள்ளது. சென்னையில் கடந்த 10 நாட்களில் டீசல் விலை 95 காசுகளும், பெட்ரோல் விலை 1 ரூபாய் 41 காசுகளும் குறைந்துள்ளது. தலைநகர் டெல்லியில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 78.42 ரூபாய்க்கும், டீசல் 73.07 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. கடந்த 10 நாட்களில் டெல்லியில் பெட்ரோல் விலை 2 ரூபாய் 08 காசுகளும், டீசல் விலை 98 காசுகளும் குறைந்துள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் விலை சரிந்து வருவதே கடந்த 10 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை சரிவுக்கு முக்கியக் காரணமாக உள்ளது. அதே சமயத்தில் எல்.பி.ஜி சிலிண்டர்கள் விலை கடந்த இரண்டு மாதங்களில் சுமார் 120 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. தலைநகர் டெல்லியில் செப்டம்பர் மாதக் கணக்குப்படி 14.2 கிலோ எடை கொண்ட எல்பிஜி சிலிண்டர் 820 ரூபாயாக மட்டுமே இருந்தது. ஆனால் நவம்பரில் இதன் விலை 939 ரூபாயாக அதிகரித்துள்ளது. சென்னையில் நவம்பரில் 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலை 958 ரூபாயாக அதிகரித்துள்ளது. செப்டம்பரில் இதன் விலை 838.50 ரூபாயாக மட்டுமே இருந்தது.

வியாழன், 8 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon