மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 10 ஆக 2020

உம்முன்னு, கம்முன்னு, ஜம்முன்னு: அப்டேட் குமாரு

உம்முன்னு, கம்முன்னு, ஜம்முன்னு: அப்டேட் குமாரு

‘மெர்சலுக்கு எதிர்ப்பு தெரிவிச்சாங்க படம் ஹிட் ஆகிடுச்சு, இந்த தடவை சர்காரும் ஹிட் ஆகும்னு போன வருசக் கணக்கை எடுத்து போட்டு விளையாடிகிட்டு இருக்காங்க. அதுக்கு முந்திய வருசம் ரோட்டுல நின்னதை மறந்துட்டாங்க’ன்னு நம்ம தோஸ்த் ரொம்பவே வருத்தப்பட்டாரு. ‘சரி இப்ப நடக்குற அலப்பறையில விஜய்.., நானும் அரசியலுக்கு வாரேன்னு இறங்கிட்டா என்ன ஆகும்’ன்னு கேட்டார். அவருக்கு என்ன ஆகும்னோ இல்லை நாட்டுக்கு என்ன ஆகும்னோ எனக்கு தெரியாது. நம்ம நெட்டிசன்ஸ் ரொம்ப ஜாலியாயிடுவாங்க. இந்த அரசியல்வாதிகள் எதுவும் சொன்னா அதுக்கு என்ன மீம் போடலாம்னு யோசிக்குறது, போட்டோ எடுக்குறது கஷ்டமா இருக்கு. இதே நடிகர்கள் எல்லாரும் வந்துட்டா அவங்கவங்க படத்துல இருந்தே நாலு போட்டோவை தூக்கி போட்டு கலக்கிடலாம்னு சொன்னேன். அப்ப போனவர் தான் இன்னும் வரல. நீங்க அப்டேட்டை பாருங்க என்ன ஆனாருன்னு பார்த்துட்டு வாரேன்.

@Kozhiyaar

இந்த படத்திற்கு விளம்பர ஒப்பந்ததாரர் அதிமுக போலும்!!

பாஜக இல்லை போலும்!!!

@Annaiinpillai

கழுத்துலயே கத்தி வச்சாலும் கருணை உள்ள மனுஷனா இருப்பவர் முடி வெட்டுபவர் !

@shivaas_twitz

மோடிஜி உடைத்ததிலேயே பெரிய பர்னிச்சர் பணமதிப்பிழப்பு..!

@Thaadikkaran

படம் ரிலீசுக்கு பிறகு எப்படி இருக்கணும்னு படத்தோட ஆடியோ ரிலீஸ்லயே பேசிட்டதாலே இப்போ விஜய் ' உம்முன்னு-கம்முன்னு-ஜம்முன்னு மோட்..!!

@Suyanalavaathi

20-தொகுதிகளுக்கான இடைதேர்தலை சந்திக்க அ.தி.மு.க தயாராக உள்ளது - தங்கமணி #

ஆனால் வானிலை மோசமாக உள்ளது, அதான !!

@Kozhiyaar

பொது இடத்தில் 'அந்த பொண்ணு அழகா இருக்கில்ல!?' எனும் மனைவியின் கேள்வி, வலை விரித்து காத்திருக்கும் வேடனை போன்றது!!!

@erode_kathir

சர்காரை ஓட வைக்க சன் பிக்சர்ஸ் உடன் அதிமுக கூட்டணி அமைக்கும்னு எதிர்பார்க்கவேயில்லை

@Thaadikkaran

ஜெயலலிதா இல்லாததால் நடிகர்களுக்கு குளிர்விட்டு போய்விட்டது - ஜெயக்குமார்# காய்ச்சல் வருவதற்கு முன் மருத்துவரை அணுகவும்..!!

@kathir_twits

தமிழகம் முழுவதும் பட்டாசு வெடித்ததாக 4548 பேர் மீது வழக்குகள் பதிவு - காவல்துறை #

இது மாதிரி எஸ்.வி சேகருக்கு பாதுகாப்பு கொடுத்த புள்ளி விவரம் சொல்லலேயே !!

@Annaiinpillai

சர்கார் படத்தை திரையிட்ட திரையரங்குகள் மீதும் வழக்கு பதியப்படும் - அமைச்சர் சி.வி.சண்முகம்# படத்தோட தியேட்டரையும் சேர்த்து பிரோமோட் பண்ண ஆரம்பிச்சிடாங்க டோய்!

@Kozhiyaar

ஆளில்லா விண்கலன்களின் கண்டுபிடிப்பை விட, ஆளில்லா கழிவு அகற்றும் இயந்திரமே இந்தியா வல்லரசு என மார்த்தட்டிக் கொள்ள அவசியமான கண்டுபிடிப்பு!!

@Thaadikkaran

மக்களை வன்முறைக்கு தூண்டும் தீவிரவாத செயலில் விஜய் ஈடுபடுகிறார் - அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு# அடுத்து என்ன.! பயங்கரவாதிகளிடம் தொடர்பு, அதானே..!

@mohanramko

பெற்ற பிள்ளைகளை பார்த்ததும், 'காலில் சக்கரம் கட்டிக்கிட்டு விதவிதமா செய்யும் அம்மாவை பார்த்துதான்' ஸ்கேட்டிங் விளையாட்டை கண்டுபிடித்து இருப்பாங்க...

@gips_twitz

இந்திய வீரர்களை பிடிக்கவில்லை என்றால் இந்தியாவில் இருக்காதீர்கள் - விராட் கோலி

இங்க பார்ரா கிரிகெட்லையும் ஒரு எச்.ராஜா இருக்காரு

@19SIVA25

அயோத்தியில் தசரத ராஜா பெயரில் மருத்துவக் கல்லூரியும், ராமர் பெயரில் விமான நிலையமும் கட்டப்படும் - முதல்வர் யோகி ஆதித்யநாத்

முதல்ல ஹாஸ்பிட்டல்ல ஆக்சிஜன் சிலிண்டரை வாங்கி வைங்க சென்றாயன்..!!

@Thaadikkaran

'பேரை கேட்டால் சும்மா அதிருதுல்ல' என அரசை அலற வைத்துவிட்டது டெங்கு கொசு..!!

@yugarajesh2

NEET-க்கு எதிரா தடை கொண்டுவர ஆலோசனை செய்ய நேரமில்லாதவர்களுக்கு ஒரு திரைப்படத்துக்கு எதிரா தடை கொண்டு வர ஆலோசனை செய்யிறாங்களாம்.

@Kadharb32402180

புது ரூபா நோட்டுல சிப்ஸ் முறுக்கு எல்லாம் இருக்கு னு அறிந்துகொண்ட தினம்

@mohanramko

இலவசம் வேணாம்னு சொல்ற சர்க்கார் படத்திற்கும், இலவசமாகவே விளம்பரம் கிடைக்குது.....

@shivaas_twitz

ரெண்டு வருஷம் முன்னாடி, இதே நாள்ல என் அக்கௌன்ட்ல பணம் இருந்துச்சி, ஏ.டி.எம்ல பணம் இல்ல...

இன்னைக்கு ஏ.டி.எம்ல பணம் இருக்கு, என் அக்கௌன்ட்ல பணம் இல்லை...

-லாக் ஆஃப்

வியாழன், 8 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon