மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 24 ஜன 2021

மாரி-2 வில் ‘மாரி’ கனெக்‌ஷன்!

மாரி-2 வில் ‘மாரி’ கனெக்‌ஷன்!வெற்றிநடை போடும் தமிழகம்

படமே இன்னும் வெளிவராத நிலையில் மாரி- 2 படம் குறித்த புதிய தகவல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இயக்குநர் பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், காஜல் அகர்வால் நடித்த படம் மாரி. இதன் அடுத்த பாகம் தற்போது தயாராகிவருகிறது. இதில் ஆட்டோ ஓட்டுநராக நடித்துள்ள சாய் பல்லவியுடன், வரலட்சுமி சரத்குமார், டோவினோ தாமஸ் உள்ளிட்டோரும் நடிக்கும் இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். தனுஷ் தனது ‘வுண்டர்பார் ஃபிலிம்ஸ்’ வாயிலாகத் தயாரிக்கிறார்.

முந்தைய படத்திற்கு அனிருத் இசைமைத்திருந்த நிலையில் தனுஷின் ஆரம்பகால படங்களுக்கு இசையமைத்திருந்த யுவன் சுமார் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது யாரடி நீ மோகினி படத்திற்கு பிறகு இப்போதுதான் தனுஷ் படத்திற்கு இசையமைக்கிறார். இந்தக் காலக்கட்டத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து மரியானில் இடம்பெற்ற கடல் ராசா எனும் பாடலை மட்டுமே தனுஷிற்காக பாடியுள்ளார் யுவன்.

முந்தைய படம் கலவையான விமர்சனங்களையே பெற்றிருப்பதால் இந்தப் படம் ஏகோபித்த வரவேற்பைப் பெறுமா எனும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் படம் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் டிவி உரிமத்தை விஜய் டிவி கைப்பற்றியுள்ளது. முதல் பாகத்தையும் விஜய் டிவியே கைப்பற்றியிருந்தது குறிப்பிட்டிருந்தது.

விஜய் சேதுபதி, த்ரிஷா நடித்த ‘96’ பட உரிமையை சன் டிவி வாங்கியிருந்தது. அந்தப் படம் தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கும்போதே தீபாவளி சிறப்புத் திரைப்படமாக சன் டிவியில் ஒளிபரப்பானது. மாரி-2 டிசம்பர் மாதத்தின் இறுதியில் வெளியிடப்படவுள்ளதாக கூறப்படுகிறது. எனவே ஜனவரி 26 குடியரசு தினத்தை முன்னிட்டு இந்தப் படம் விஜய் டிவியில் ஒளிபரப்பானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

வியாழன், 8 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon