மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 26 மே 2020

டெல்லியில் டிரக்குகளுக்கு தடை!

டெல்லியில் டிரக்குகளுக்கு தடை!

டெல்லியில் காற்று மாசுபாடு அளவுக்கு அதிகமாக இருப்பதால், இன்று முதல் மூன்று நாட்களுக்கு அங்கு டிரக்குகள் நுழைய மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தடை விதித்துள்ளது.

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தின்போது பட்டாசுகள் வெடிப்பதற்குப் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்தது உச்ச நீதிமன்றம். குறிப்பிட்ட டெசிபல் அளவுக்கு மேல் ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டது. மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது, டெல்லியில்தான் அதிகளவில் காற்று மாசு இருக்கிறது. அதனால்தான், அங்கு பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மீறி டெல்லியில் அதிகளவில் பட்டாசு வெடிக்கப்பட்டது தெரிய வந்துள்ளது. கடந்த ஆண்டைப் போலவே, இந்த ஆண்டும் டெல்லியில் 50 லட்சம் கிலோ பட்டாசுகள் வெடிக்கப்பட்டுள்ளன. இதனால், காற்றின் மாசுபாடு அபாய அளவைத் தாண்டியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“காற்று மாசுபாட்டைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. காற்று மாசு அதிகமாக இருப்பதால், இன்று முதல் வருகிற 10ஆம் தேதி வரை டிரக்குகள் எதுவும் டெல்லிக்குள் நுழையக் கூடாது” என்று மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தடை விதித்துள்ளது.

வியாழன், 8 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon