மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 19 செப் 2020

ஐயப்பனை தரிசித்தது 200 பேர் தான்!

ஐயப்பனை தரிசித்தது 200 பேர் தான்!

இரண்டு நாட்களுக்கு முன்பு, சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வந்த உண்மையான பக்தர்கள் 200 பேர் தான் என்றும், எஞ்சிய சுமார் 7,000 பேர் பாஜக, ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் என்றும் கேரள போலீசார் தெரிவித்துள்ளனர்.

கடந்த திங்கள்கிழமையன்று (நவம்பர் 5), சித்திரை ஆட்டம் பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது. அன்றும், அதற்கடுத்த நாளான தீபாவளியன்றும், சபரிமலைக்கு 7,300 பேர் சென்றுள்ளனர். சபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து, சில அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினர். ஆனால், கோயிலுக்கு வந்த பெண்கள் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் தான் என்பது விசாரணையில் உறுதியானது.

போராட்டம் நடந்தபோது, பெண் பக்தர் மீது இளைஞர் ஒருவர் தேங்காயை எறிந்து தாக்க முயன்றார். அந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். கடந்த இரண்டு நாட்களில் சபரிமலைக்கு வந்தவர்களில் உண்மையான பக்தர்கள் வெறும் 200 பேர் என்று தெரிவித்துள்ளனர் கேரள போலீசார்.

“எஞ்சிய 7,000க்கும் அதிகமானோர் போராட்டங்களை நடத்த வேண்டும் என்பதற்காகவே குவிக்கப்பட்டவர்கள். குறிப்பாக, பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்” என்று கூறியுள்ளனர்.

ஐயப்பன் கோயிலில் தொடர்ந்து பிரச்சினைகளில் ஈடுபடும் நபர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என்றும், இந்த நபர்கள் மகரவிளக்கு பூஜையின்போது அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

வியாழன், 8 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon