மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 24 செப் 2020

சிறுமியின் வாயில் வெடித்த பட்டாசு!

சிறுமியின் வாயில் வெடித்த பட்டாசு!

உத்தரப் பிரதேசத்தில் சிறுமியின் வாயில் பற்றவைக்கப்பட்ட பட்டாசு வெடித்ததில், அவர் கடுமையாகக் காயமடைந்துள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில் உள்ளது மிலாக் எனும் கிராமம். இங்கு வசித்துவரும் சஷிகுமார் என்பவரது மகள், கடந்த 5ஆம் தேதியன்று இரவு தனது வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்தார். இந்த சிறுமிக்கு 3 வயதாகிறது. வீட்டின் வெளியே பட்டாசு வெடித்து குழந்தைகள் விளையாடிய நிலையில், திடீரென்று சஷிகுமார் மகள் அலறும் சத்தம் கேட்டது. அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் வந்து பார்த்தபோது, சஷிகுமாரின் மகள் வாயில் கடுமையான காயம் ஏற்பட்டிருந்தது. உடனடியாக, அவர் அருகிலுள்ள மருத்துவமனையொன்றில் அனுமதிக்கப்பட்டார். சஷிகுமாரின் மகளது வாய்ப்பகுதியில் 50 தையல்கள் போடப்பட்டன.

இதன் பின்னரே, நம்மூரில் அணுகுண்டு என்றழைக்கப்படும் சட்லி குண்டு அச்சிறுமியின் வாயில் பற்றவைக்கப்பட்ட தகவல் தெரிய வந்தது. கடந்த திங்கள்கிழமையன்று பட்டாசு விபத்து நடந்தாலும், நேற்று (நவம்பர் 7) இது பற்றி காவல்நிலையத்தில் புகார் அளித்தார் சஷிகுமார். மிலாக்கில் வசித்துவரும் ஹர்பால் எனும் இளைஞர், தனது மகளின் வாயில் பட்டாசைப் பற்ற வைத்ததாகப் புகாரில் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து, ஹர்பால் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக இருந்துவரும் அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

சஷிகுமார் மகளது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

வியாழன், 8 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon