மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 24 செப் 2020

பட்ஜெட் செலவைக் குறைக்கும் மத்திய அரசு!

பட்ஜெட் செலவைக் குறைக்கும் மத்திய அரசு!

2018-19ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் ரூ.50,000 கோடியைக் குறைக்க மோடி அரசு திட்டமிட்டுள்ளது.

நடப்பு நிதியாண்டுக்கான வருவாய் பற்றாக்குறையை 3.3 விழுக்காடாகக் குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த இலக்கை எட்டும் விதமாக இந்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் ரூ.50,000 கோடியை அல்லது ஒட்டுமொத்த பட்ஜெட்டில் 2 விழுக்காட்டை மோடி அரசு குறைக்கத் திட்டமிட்டுள்ளது. வரி அல்லாத வருவாய்கள் குறைவாக இருப்பதும் பட்ஜெட் செலவை குறைப்பதற்கு காரணமாகக் கூறப்படுகிறது. பல்வேறு துறைகள் தங்களது செலவைக் குறைத்துக்கொள்ளவுள்ளதால் சில திட்டங்களுக்கான நிதிகள் குறைக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளது.

இதுகுறித்து பெயர் குறிப்பிட விரும்பாத அரசு அதிகாரி ஒருவர் பினான்சியல் எக்ஸ்பிரஸ் ஊடகத்திடம் பேசுகையில், “அமைச்சரவையும், அதன் துறைகளும் தங்களது செலவைக் குறைக்க திட்டமிட்டுள்ளன. தொலைத்தொடர்பு, உணவு பதப்படுத்துதல் மற்றும் விளையாட்டுத் துறைக்கான பட்ஜெட் செலவுகளை 30 முதல் 40 விழுக்காடு வரை குறைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சகம் இதுவரையில் இந்த ஆண்டுக்கான பட்ஜெட் தொகையில் 57 விழுக்காட்டை செலவிட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டில் சில ஆயிரம் கோடி ரூபாய்களைக் குறைத்துக்கொள்ள பாதுகாப்பு அமைச்சகமும் முடிவெடுத்துள்ளது” என்றார்.

வியாழன், 8 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon