மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 9 ஜூலை 2020

அனுஷ்காவின் சைலண்ட் மோடு!

அனுஷ்காவின்  சைலண்ட் மோடு!

நடிகை அனுஷ்கா நடிக்கவுள்ள புதிய படம் குறித்து எற்கெனவே சில தகவல்கள் உலாவந்தன. இந்நிலையில் அந்தப் படம் குறித்த சமீபத்திய தகவல்கள் தற்போது வந்துள்ளன.

ரஜினி,விஜய், அஜித் என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளதுடன் தமிழ், தெலுங்கு சினிமாக்களில் உச்ச நடிகையாக வலம்வருபவர் நடிகை அனுஷ்கா. கதாநாயகர்களை மட்டுமே மையமாகக் கொண்டு கதையமைக்கப்பட்டு வந்த சினிமாக்கள் தற்போது கதாநாயகிகளை மட்டுமே லீடிங் ரோலில் நடிக்கவைக்கவும் முன்வருகின்றன.

கதாநாயகிகள் பிரதான ரோல் ஏற்பது கோலிவுட்டுக்கு ஒன்றும் புதிது இல்லையென்றாலும் ஒப்பீட்டு அளவில் கணக்கிட்டால் இவ்வகை படங்கள் இப்போதுதான் அதிகமாக வெளிவருகின்றன எனும் விஷயம் கண்கூடு. இந்த மாற்றத்தில் படங்களில் லீடிங் ரோல் ஏற்று கவனம் ஈர்த்த நடிகை அனுஷ்காவுக்கும் முக்கியப் பங்குண்டு.

பாகமதியில் கடைசியாக நடித்து கவனம் பெற்றிருந்த அவர் தற்போது ஹேமந்த் மதுக்கர் இயக்கும் சைலன்ஸ் எனும் படத்தில் நடிக்கிறார். தான் எந்த நடிகருடன் இணைந்து கோலிவுட் என்ட்ரி கொடுத்தாரோ அந்த மாதவனுடனேயே இணைந்து இதில் நடிக்கிறார். திரைக்கதை எழுத்தாளரான கோனா வெங்கட் இதில் இணை தயாரிப்பையும் மேற்கொள்கிறார்.

இந்தப் படம் இந்த ஆண்டின் செப்டம்பரிலேயே படப்பிடிப்பைத் தொடங்கும் என சினிமா வட்டாரத்தில் கூறப்பட்டுவந்தது. ஆனால் இப்படம் 2019ஆம் ஆண்டுதான் தொடங்கும் எனத் தற்போது தெரிவித்துள்ளார் கோனா வெங்கட். அனுஷ்கா நேற்று தனது பிறந்தநாளைக் கொண்டாடிய நிலையில் அவருக்கு வாழ்த்துத் தெரிவிக்கும் விதமாக கோனா வெங்கட்டின் ட்விட்டர் பதிவு இதை உறுதி செய்துள்ளது. அதன்படி இப்பட படப்பிடிப்பு முழுக்க முழுக்க அமெரிக்காவின் ஸீட்டில் பகுதியில் நடக்கவுள்ளது.

வியாழன், 8 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon