மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 24 ஜன 2021

பெண் விமான ஓட்டிகள்: இந்தியா முதலிடம்!

பெண் விமான ஓட்டிகள்: இந்தியா முதலிடம்!வெற்றிநடை போடும் தமிழகம்

உலகிலேயே அதிக பெண் விமான ஓட்டிகள் அதிகம் உள்ள நாடாக இந்தியா உள்ளது.

இதுகுறித்து சர்வதேச பெண் விமான ஓட்டிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘உலகிலேயே மிக அதிக பெண் விமான ஓட்டிகள் உள்ள நாடு இந்தியா. சர்வதேச சராசரியுடன் ஒப்பிடுகையில் இருமடங்கு அதிகமான பெண் விமான ஓட்டிகள் இந்தியாவில் உள்ளனர். சர்வதேச அளவில் உள்ள மொத்த விமான ஓட்டிகளில் பெண் விமான ஓட்டிகளின் பங்களிப்பு 5.4 விழுக்காடாக மட்டுமே உள்ளது. ஆனால் இந்தியாவில் உள்ள ஒட்டுமொத்த விமான ஓட்டிகளில் பெண் விமான ஓட்டிகளின் அளவு 12.4 விழுக்காடாக உள்ளது.

இந்தியாவில் மொத்தமாக 8,797 விமான ஓட்டிகள் உள்ளனர். அதில் பெண் விமான ஓட்டிகள் 1,092 பேர். அதில் 385 பேர் கேப்டன்களாகவும் உள்ளனர். சர்வதேச அளவில் 1.5 லட்சம் விமான ஓட்டிகள் உள்ளனர். ஆனால் 8,061 பெண் விமான ஓட்டிகள் மட்டுமே உள்ளனர். 2,190 பேர் பெண் கேப்டன்களாகவும் உள்ளனர்’ என்று கூறியுள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரையில் உள்நாட்டு விமான சேவை நிறுவனமான ஜூம் நிறுவனத்தில் 30 விமான ஓட்டிகளில் 9 பேர் பெண்களாவார். இண்டிகோ நிறுவனத்தில் 351 பேரும், ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் 231 பேரும், ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தில் 113 பேரும், ஏர் இந்தியாவில் 217 பேரும் பெண் விமான ஓட்டிகளாவர்.

வியாழன், 8 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon