மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 26 பிப் 2021

செய்தியாளருடன் ட்ரம்ப் வாக்குவாதம்!

செய்தியாளருடன் ட்ரம்ப் வாக்குவாதம்!

மின்னம்பலம்

அமெரிக்க வெள்ளை மாளிகையில் செய்தியாளருடன் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வாக்குவாதம் செய்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அமெரிக்க வெள்ளை மாளிகையில் நேற்று(நவம்பர் 7) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது, சி.என்.என். தொலைக்காட்சியின் நிருபர் ஜிம் அகோஸ்டா, மத்திய அமெரிக்க அகதிகள் தொடர்பாக ட்ரம்ப்பின் நிலை குறித்து கேள்வி எழுப்பினார். அப்போது, “நீங்கள் சி.என்.என்.ஐ ஆட்சி செய்யுங்கள், என்னை நாட்டை ஆட்சி செய்யவிடுங்கள்” என்று ட்ரம்ப் பதிலளித்தார். எனினும், இந்த பதிலால் திருப்தி அடையாத ஜிம் தொடர்ந்து கேள்வி எழுப்பினார்.

கேள்வி கேட்டது போதும் என்று ட்ரம்ப் அவரிடம் கூறினார். ஒருகட்டத்தில் மைக்கை ஒப்படைத்துவிட்டுச் செல்லுமாறு ஜிம்மிடம் அறுவுறுத்தப்பட்டது. அவர் அதற்கு மறுத்துத் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து வெள்ளை மாளிகையில் செய்தி சேகரிப்பதற்கான அவரது அனுமதி ரத்து செய்யப்பட்டது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஊடகங்களுக்கு இடையேயான மோதல் போக்கு நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அமெரிக்க ஊடகங்கள் பொய்யான செய்திகளை வெளியிட்டு மக்களைத் திசை திருப்பி வருவதாக ட்ரம்ப் விமர்சித்து வருகிறார்.

பத்திரிகையாளர்களிடம் மோதல் போக்கையும் அவர் கடைபிடித்து வருகிறார். கடந்த ஜூலை மாதம் சி.என்.என். பத்திரிகையாளர் ஒருவர் ட்ரம்பிடம் கேள்வி கேட்க முயன்றபோது வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேற்றப்பட்டார். ட்ரம்ப்பின் இந்த மோதல் போக்கை கண்டித்து ஆகஸ்ட் மாதம் அந்நாட்டு ஊடகங்கள் போராட்டம் நடத்தின. நியூயார்க் டைம்ஸ், நியூயார்க் போஸ்ட் உட்பட சுமார் 350க்கும் பத்திரிகைகள் ட்ரம்புக்கு எதிராக தலையங்கம் வெளியிட்டு தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தின.

வியாழன், 8 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon