மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 21 பிப் 2020

இந்தியாவுக்கு எதிரான ஆஸ்திரேலிய வியூகம்!

இந்தியாவுக்கு எதிரான ஆஸ்திரேலிய வியூகம்!

இந்தியாவுக்கு எதிராக களமிறங்கவுள்ள டி-20 அணியை அறிவித்துள்ளது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி.

இந்திய அணி தற்போது மேற்கிந்தியத் தீவுகளுடன் இணைந்து டி- 20 போட்டித் தொடரில் ஆடிவருகிறது. முதல் இரு ஆட்டங்களிலும் வெற்றிகண்டு தொடரைக் கைப்பற்றியுள்ள இந்தியா, நவம்பர் 11ஆம் தேதி நடைபெறவுள்ள 3ஆவது போட்டியிலும் வெற்றி வாகை சூடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தத் தொடர் முடிந்த பிறகு இந்திய அணி ஆஸ்திரேலிய அணியுடன் விளையாடவுள்ளது. இந்நிலையில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளுக்கு எதிராக விளையாடவுள்ள தமது டி 20 அணியை அறிவித்துள்ளது ஆஸ்திரேலியா.

அதன்படி ஆரோன் ஃபிஞ்ச் கேப்டனாக செயல்படவுள்ளார். துணை கேப்டனாக அலெக்ஸ் கேரி நியமிக்கப்பட்டிருக்கிறார். காயத்திலிருந்து மீண்டு வந்துள்ள அந்த அணியின் வேகப் பந்து வீச்சாளர் ஜேஸன் பெரண்டார்ஃப் அணியில் இணைந்துள்ளார். மேலும் அஷ்டான் அகர், நாதன் கவுல்டர் நைல், க்றிஸ் லைன், அதிரடி ஆட்டக்காரர் க்ளென் மாக்ஸ்வெல், பென் மெக்டெர்மாட், ஷார்ட், ஸ்டான்லேக், டை, ஸ்டோய்னிஸ் ஆடம் ஸம்பா ஆகியோரும் இதில் உள்ளனர்.

ஆஸ்திரேலிய அணியில் நிறைய புதிய வீரர்கள் உள்ளனர். இதில் பெரும்பாலானோர் ஐபிஎல் போட்டிகளில் விளையாடியவர்கள். எனவே இந்திய அணி வீரர்களின் களச் செயல்பாடுகளை அவர்கள் அறிந்துவைத்திருக்க வாய்ப்புள்ளது. இது அவ்வணிக்குச் சாதகமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வியாழன், 8 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon