மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 10 ஆக 2020

அக்‌ஷரா ‘மீ டூ’ புகாரில் யார், யார்?

அக்‌ஷரா  ‘மீ டூ’ புகாரில் யார், யார்?

நடிகை அக்‌ஷரா ஹாசனின் தனிப்பட்ட புகைப்படங்கள் சிலவற்றை சமீபத்தில் இணையத்தில் சிலர் வெளியிட்டிருந்தனர். அவற்றைக் கண்ட ஒட்டுமொத்த திரையுலகமே அதிர்ச்சியடைந்தது.

அக்‌ஷராவைவிடவும் கமல்ஹாசனின் மீதே பலரது அறிவுரைகளும் திசை திரும்பின. இதுவரையில் எவ்வித ரியாக்‌ஷனும் இல்லாமல் இருந்த அக்‌ஷரா தரப்பிலிருந்து தற்போது ஓர் அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. அந்த அறிக்கையில் தனக்கு நேர்ந்த அவமானத்துக்குக் காரணமானவர்களைத் தண்டிப்பது குறித்து மட்டுமல்லாமல், தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமையில் பங்குகொள்பவர்கள் யார் என்பது குறித்தும் அக்‌ஷரா விவரித்திருக்கிறார்.

அக்‌ஷராவின் அறிக்கை:

சமீபத்தில் எனது தனிப்பட்ட படங்கள் சில இணையத்தில் கசிந்தன. யார், எதற்காக இதைச் செய்தார்கள் என இதுவரை எனக்குத் தெரியவில்லை. ஆனால், ஓர் இளம் பெண்ணை இத்தனை கடுமையான பாதிப்புக்கு ஆளாக்குவது, ஒரு வக்கிரமான மனதுடையவனுக்கு மட்டுமே மகிழ்ச்சியைத் தரும். குறிப்பாகச் சொல்வதென்றால், இந்திய நாடு #மீ டூ விவகாரம் குறித்து எழுச்சி பெற்று விவாதித்துக்கொண்டிருக்கும் சமயத்தில் வெளியான போட்டோக்களை இவ்வளவு வேகமாகப் பகிர்வதற்கும் ஆட்கள் இருக்கின்றனர் என்று பார்க்கும்போது, அந்த வக்கிர புத்தி கொண்டவர்கள் இன்னும் இருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது. நான் மும்பை போலீஸ் மற்றும் சைபர் செல்லில் புகார் கொடுத்து, இந்தப் படங்களை டிராக் செய்ய சொல்லிக் கேட்டிருக்கிறேன். எவ்வளவு ஆழத்துக்கும் சென்று இதனை வெளியிட்டவர்களைத் தண்டிக்க வேண்டும் என்பதே என் முயற்சி. மற்றவர்களின் தனிப்பட்ட வாழ்வில் தலையிடாமல் தன்மானத்துடன் வாழு, வாழ விடு என்பதுதான். அப்படியில்லாமல் தொடர்ந்து என் படங்களைப் பகிர்பவர்களும் என் மீது நடத்தப்படும் இந்தப் பாலியல் குற்றத்தில் பங்குகொள்பவர்களாவார்கள்.

வியாழன், 8 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon